தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/கையில் தீப்பந்தம், அரிவாளை ஏந்தியபடி கருப்புசாமி வேடமிட்டு கலெக்டரிடம் மனு

கையில் தீப்பந்தம், அரிவாளை ஏந்தியபடி கருப்புசாமி வேடமிட்டு கலெக்டரிடம் மனு

கையில் தீப்பந்தம், அரிவாளை ஏந்தியபடி கருப்புசாமி வேடமிட்டு கலெக்டரிடம் மனு

1


ADDED : நவ 17, 2026 12:53 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 17, 2026 12:53 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கருப்புசாமி வேடமணிந்த ஒருவர், கையில் தீப்பந்தம் மற்றும் அட்டையில் செய்த அரிவாளை ஏந்தியபடி ஆக்ரோஷமாக வந்தார். அவருடன் வந்த ஹிந்து முன்னணியினர், 'திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் கோரிக்கைக்காக, பதினெட்டாம்படி கருப்பே நேரில் வந்திருக்கிறார்,' என்று கூறினர்.

இதையடுத்து, அந்த அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையில், கலெக்டர் முத்துக்குமரனிடம் மனு அளித்தனர். ஹிந்து முன்னணி பொதுசெயலர் கிஷோர்குமார் கூறுகையில், “வரும், 24ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள துாணில், ஹிந்து சமய அறநிலையத்துறை தீபத்தை ஏற்ற வேண்டும்,” என்றார்.

இதேபோல், திருப்பரங்குன்றம் தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கக்கோரி, அரியலுார் கலெக்டர் மிருணாளினியிடம் ஹிந்து முன்னணியினர் மனு அளித்தனர். [படம்] திருப்பூரில், இந்து முன்னணி சார்பில், திருப்பரகுன்றம் மலை மீதி தீபம் ஏற்ற கோரி, கருப்புசாமி வேடமணிந்து கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த தொண்டர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us