/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
விரட்டியடிக்கப்பட்ட பெற்றோர்; 'கல் நெஞ்ச' மகனிடம் விசாரணை
/
விரட்டியடிக்கப்பட்ட பெற்றோர்; 'கல் நெஞ்ச' மகனிடம் விசாரணை
விரட்டியடிக்கப்பட்ட பெற்றோர்; 'கல் நெஞ்ச' மகனிடம் விசாரணை
விரட்டியடிக்கப்பட்ட பெற்றோர்; 'கல் நெஞ்ச' மகனிடம் விசாரணை
ADDED : ஜூலை 04, 2025 12:42 AM

பல்லடம்; வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த வயதான தம்பதியர் குறித்து, பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்லடத்தை சேர்ந்தவர்கள் சிவலிங்கம் -- சுப்புலட்சுமி தம்பதி. இவர்களது ஒரு மகன்; இரு மகள்கள். மகன் குமரவேல் 48; மற்றும் செல்வி 49 மற்றும் புவனேஸ்வரி 44 ஆகிய மகள்களும் உள்ளனர். பல்லடத்தை அடுத்த, ஊஞ்சப்பாளையம், சமத்துவபுரத்தில் உள்ள மாமனார் வீட்டில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் குமரவேலுடன், இவரது பெற்றோரும் வசிக்கின்றனர். இங்கு, சிவலிங்கமும் -சுப்புலட்சுமியும், சித்ரவதை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட இருவரும், பல்லடம் போலீசில் தஞ்சமடைந்தனர்.
சிவலிங்கம் கூறுகையில், 'பல்லடம் அருகே உள்ள சாய ஆலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நான், சில ஆண்டுக்கு முன் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இரண்டு மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் உள்ள நிலையில், மகன் குமரவேல் வீட்டில்தான் இருவரும் வசிக்கிறோம். இங்கு, குமரவேலின் மாமனார், மாமியார் உள்ளிட்டோர், கொடுமைப்படுத்துகின்றனர்.
தகாத வார்த்தைகளால் எங்களை திட்டுவதும், அடித்து துன்புறுத்துவதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர். நாங்கள் இயற்கை உபாதை கூட கழிக்க விடாமல், கழிப்பிடத்துக்கு பூட்டு போட்டு வைக்கின்றனர்.
குமரவேலிடம் கூறினால், நான் இருப்பதே மாமனார் வீட்டில் என்பதால், அவர்கள் சொல்லும்படி தான் கேட்டாக வேண்டும் என்கிறார். இச்சூழலில், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டோம். எங்கு செல்வது என்று தெரியாமல், தெய்வமே துணை என, பழநி சென்றோம். இது, மகள்கள் செல்வி மற்றும் புவனேஸ்வரிக்கு தெரியவர, எங்களை பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். நாங்கள் குமரவேலுடன் இருக்க விரும்பவில்லை. எங்களை எங்காவது ஆசிரமத்தில் சேர்த்து விட்டால் கூட இருந்து கொள்கிறோம்' என கண்ணீருடன் கூறினர்.
இது தொடர்பாக, குமரவேலை ஸ்டேஷனுக்கு வரவைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.