/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கழிப்பறை கட்டணம் ரூ.1,000 பெங்களூரு மாலில் அதிர்ச்சி
/
கழிப்பறை கட்டணம் ரூ.1,000 பெங்களூரு மாலில் அதிர்ச்சி
கழிப்பறை கட்டணம் ரூ.1,000 பெங்களூரு மாலில் அதிர்ச்சி
கழிப்பறை கட்டணம் ரூ.1,000 பெங்களூரு மாலில் அதிர்ச்சி
ADDED : செப் 19, 2024 12:56 AM

பெங்களூரு, பெங்களூரு மாலில் கழிப்பறை பயன்படுத்த 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகர மக்கள் பொழுது போக்குவதற்கு, தேர்வு செய்யும் இடங்களில் மால்களும் ஒன்று. மால்களுக்கு குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது, உணவு சாப்பிடுவது என நேரத்தை செலவிடுகின்றனர்.
இந்நிலையில், 'ரெட்டிட்' என்ற சமூக வலைதளத்தில், 'டெஸ்க்கீ9633' என்ற பயனர் பதிவிட்ட பதிவு:
பெங்களூரு சர்ச் தெருவில் இருந்து ஷாப்பிங் செய்ய, ஒயிட்பீல்டு பீனிக்ஸ் மாலுக்கு சென்றேன். மாலுக்கு சென்றதும் தரைதளத்தில் உள்ள கழிப்பறைக்கு, இயற்கை உபாதை கழிக்க சென்றேன். கழிப்பறை முன்பு வி.ஐ.பி., ரெஸ்ட் ரூம் என்று, பலகை தொங்க விடப்பட்டு இருந்தது.
கழிப்பறை முன் இருந்த, மாலின் பாதுகாப்பு அதிகாரி, 'இந்த கழிப்பறையை பயன்படுத்த 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்' என்று கூறினார். 'நான் ஷாப்பிங் செய்ய வந்து உள்ளேன்' என்று கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை.
மாடியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தும்படி கூறி, என்னை அனுப்பி வைத்தார். மாடி கழிப்பறையை மால் நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை.
துர்நாற்றம் வீசியது. பல பிளஷ்கள் வேலை செய்யவில்லை. இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
யாராவது அவசரமாக கழிப்பறைக்கு செல்லும்போது, வேறு கழிப்பறைக்குச் செல்ல சொன்னால், மன அழுத்தமாக இருக்கும்.
இந்த மாலில் உள்ள விதிகள் போல, மற்ற மாலில் எங்கும் நான் கேள்விப்பட்டது இல்லை.
இங்கும், தேவை இல்லாத, சமூகப் பிரிவுகள் இருப்பதாக ஒரு உணர்வு எழுகிறது. மால் நிர்வாகம் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், மீண்டும் அந்த மாலுக்கு செல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மால் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து உள்ளது.