உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 04, 2026 03:55 AM

அ நிறம் | அளவு
வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த கூலி தொழிலாளி அயாஸ் பாஷா, வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
என் பெயரில் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அதற்கான ஜி.எஸ்.டி., வரியாக, 80 லட்சத்து, 88,626 ரூபாய் கட்ட வேண்டும் என்றும், வங்கி செயலி மூலம் எனக்கு தெரியவந்தது.
தொடர்ந்து, என் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, என் 'பான் கார்டு' தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, என் பெயரிலுள்ள தவறான பதிவுகளை நீக்கி, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
