sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

தமிழர்களின் பாரம்பரிய ராஜ போர்க்கலை பயிற்சியளித்து வரும் சிலம்பம் ஆசிரியர்

/

தமிழர்களின் பாரம்பரிய ராஜ போர்க்கலை பயிற்சியளித்து வரும் சிலம்பம் ஆசிரியர்

தமிழர்களின் பாரம்பரிய ராஜ போர்க்கலை பயிற்சியளித்து வரும் சிலம்பம் ஆசிரியர்

தமிழர்களின் பாரம்பரிய ராஜ போர்க்கலை பயிற்சியளித்து வரும் சிலம்பம் ஆசிரியர்


UPDATED : ஆக 28, 2025 10:29 PM

ADDED : ஆக 28, 2025 02:15 AM

Google News

UPDATED : ஆக 28, 2025 10:29 PM ADDED : ஆக 28, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மறவாமல் ராஜ போர்க்கலை சங்கம் வைத்து சிலம்ப பயிற்சியில் மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியர் வேல்முருகன்.

கடலுார் மாவட்டம், வடலுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன்.61; சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளியில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக காவலராக பணியாற்றியுள்ளார்.இவர் வடலுாரில் ராஜ போர்க்கலை வளர்ச்சி சங்கம் வைத்து மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சியளித்து வருகிறார்.

டி.ஜி.எம்., பள்ளியில் காவலராக இருந்தபோதே பகுதி நேரமாக மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய போர்க்கலை மறந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் வேல்முருகன் சிலம்பம், வர்ம கலை, வேல்கம்பு, சுருள்வால், உள்ளிட்ட பல்வேறு பயிற்சியளித்து மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

தன்னிடம் சிலம்பம் கற்க வரும் மாணவர்களுக்கு கம்பு சுற்றுதல், தேகப்பயிற்சி, தரைபாடம், தண்டால் , பஸ்கி, கர்லை கட்டை சுற்றுதல், வளைய பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சியளிக்கின்றார்.

போர்க்கலை பயிற்சியில் பாம்பு, சிங்க அரை, கழகு ஏத்து, உடும்பு பிடி, சிவ கலை, புளி அரை துாக்கு குத்துவரிகைளை முறையாக பயிற்சியளிக்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிலம்பத்தில் பல கட்டமாக பயிற்சி அளித்து மாணவர்களை உருவாக்கி வரும் வேல்முருகன் சிலம்ப ஆசான் குச்சி, 8அடி நீளம் கொண்டு வேல்கம்பு சுழற்றுதல், சுருள் வாள் சுற்றுதல், இரட்டை வாள் கத்தி, சந்திரவேல், உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்களுக்கு பயிற்சி அளித்த வருகின்றார்.

இவரிடம் சிதம்பரம், வடலுார், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் பலர் பயிற்சியெடுத்து வருகின்றனர்.

இவருடைய மாணவர்கள் கோவை, ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாநில அளவில் ேபாட்டிகளில் வென்று கேடயங்கள், பரிசு சான்றுகள், பதக்கம் உள்ளிட்டவைகளை பெற்றுள் ளனர்.






      Dinamalar
      Follow us