/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் 'ஹாட்ரிக்' வெற்றி
/
உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் 'ஹாட்ரிக்' வெற்றி
உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் 'ஹாட்ரிக்' வெற்றி
உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் 'ஹாட்ரிக்' வெற்றி
UPDATED : நவ 17, 2025 11:02 AM
ADDED : நவ 17, 2025 01:48 AM

மதுரை: உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 16ம் உலக ஆணழகன் போட்டி நவ., 11ல் துவங்கி நேற்று முடிந்தது.
இந்தோனேஷியாவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளில் இருந்தும் நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.
ஒட்டுமொத்த ஆடவர் பிரிவில், 715 புள்ளிகள் பெற்று இந்திய அணி தங்கம் வென்றது. மகளிர் பிரிவில் 245 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது.
இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில், 'மிஸ்டர் யுனிவர்ஸ்' பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சே ர்த்தார். இந்த பட்டத் தை இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.