/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
7 பேரை வாழவைத்த 17 வயது வாலிபர்
/
7 பேரை வாழவைத்த 17 வயது வாலிபர்
ADDED : பிப் 28, 2026 01:51 AM

மதுரை: கரூர் அரவங்குறிச்சியைச் சேர்ந்த சுமைதுாக்கும் தொழிலாளி முருகன் மகன் பாலு 17. விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடலுறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டன.
சுமைதுாக்கும் தொழிலாளியான பாலு, பிப்., 23 ம் தேதி டூவீலரில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிப். 26 ல் மூளைச்சாவு நிலையை அடைந்தார். மகனது உடல் உறுப்புகளை தானமாக தர முருகன் முன்வந்தார்.
இதயம், நுரையீரல் எடுக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. கல்லீரல் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள், தோல் ஆகியவை மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மருத்துவமனையில் அஞ்சலி செலுத்திய பின் இறுதி மரியாதைக்காக கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உடல் அனுப்பப்பட்டது.

