/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
போலியோவை வென்று கிரிக்கெட்டில் சாதித்த வீரர்
/
போலியோவை வென்று கிரிக்கெட்டில் சாதித்த வீரர்
UPDATED : ஜன 17, 2025 04:26 PM
ADDED : ஜன 17, 2025 07:22 AM

போலியோவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு, கிரிக்கெட்டில் சாதனை புரிந்த கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
10 வயது
கர்நாடக மாநிலம், மைசூரில், 1945ல் பிறந்தவர் சந்திரசேகர் பகவத் சுப்ரமண்யா. மற்ற குழந்தைகள் போன்று வளர்ந்த அவருக்கு, 6 வயதில் வலது கை போலியோவால் பாதிக்கப்பட்டது.
இதனால் பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர். ஆனால், 10வது வயதில் அவரது வலது கை சரியானது.
அந்த காலகட்டத்தில் மற்றவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த அவருக்கும், அதில் ஆர்வம் ஏற்பட்டது. பின், அவரது பெற்றோர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது, நகரில் 'லெதர்' பந்தில் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தார்.
இதிலும் பயிற்சி பெற்ற அவர், கிளப் அளவிலான அணியில் விளையாட துவங்கினார். அப்போது, சோதனை முறையில் பல பந்து வீசி, நிபுணத்துவம் பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானார். 1963 - 64ல் இங்கிலாந்து அணியினர், இந்தியாவுக்கு வந்திருந்தனர். மும்பையில் நடந்த போட்டியில், முதல் இன்னிங்சில், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.
ஆனாலும், நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். அதுபோன்று இரண்டாவது இன்னிங்சில், ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
அதன்பின், 1971ல் இங்கிலாந்துக்கு சென்று இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில், 38 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்களை வீழ்த்தி, இந்திய அணி வெற்றிக்கு வழிவகுத்தார்.
அப்போது இவருக்கு 'நுாற்றாண்டின் சிறந்த பவுலர்' என்ற விருது வழங்கப்பட்டது. அதுபோன்று, மெல்போர்ன் சென்ற இந்திய அணியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 104 ரன்களுக்கு 12 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
விவியன் ரிச்சர்ட்ஸ்
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக, 1974 - 75ல் நடந்த போட்டியில், பிரபலமான கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்சை முதல் இன்னிங்சில் 4, இரண்டாவது இன்னிங்சில் 3 ரன்களில் ஆட்டம் இழக்க வைத்தார்.
அடுத்த டெஸ்ட் போட்டியில், சந்திரசேகர் பகவத் சுப்ரமண்யா இடம் பெறவில்லை. இப்போட்டியில், விவியன் ரிச்சர்ட்ஸ், 192 ரன்கள் எடுத்தார்.
கடைசி போட்டி
நியூசிலாந்துக்கு இந்திய அணி சென்ற போது, முதன் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இதிலும், அணி சார்பில் 37 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆனால், பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால், இந்திய அணி தோல்வி அடைந்தது. துரதிர்ஷ்டவசமாக இதுவே அவருக்கு கடைசி போட்டியாகவும் அமைந்தது.
இங்கிலாந்துக்கு 1979ல் இந்திய அணி சென்றது. இங்கு முதல் இன்னிங்சில், 113 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
பேட்ஸ்மேன்களும் சோபிக்காததால், இந்திய அணி தோல்வியை தழுவியது. இதுவே அவருக்கு கடைசி போட்டியாகவும் அமைந்தது
. - நமது நிருபர் -