/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சிவகங்கை வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு
/
சிவகங்கை வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு
ADDED : பிப் 18, 2025 07:09 AM

சிவகங்கை; வைகை ஆற்றில், 4 அடி உயரம் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கானுாரில், பொதுப்பணித்துறை சார்பில் வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டுமான பணி நடக்கிறது. அப்போது, ஆற்றில் பள்ளம் தோண்டிய போது, அம்மன் கற்சிலை கிடைத்தது. பீடத்துடன் அமர்ந்த நிலையில், 4 அடி உயரத்துடன் கூடிய அம்மன் சிலையில், வலது கை பக்தர்களை ஆசிர்வதிப்பது போன்றும், மற்றொரு கையில் சங்கு ஏந்திய நிலையிலும் உள்ளது.
சிலை குறித்து கீழடி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு பின், திருப்புவனம் தாசில்தார் விஜயகுமாரிடம் சிலையை முறைப்படி ஒப்படைக்க உள்ளனர். உக்கிர அம்மன் சிலை என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

