/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
இந்திய வானிலை ஆய்வு துறை இன்று 150ம் ஆண்டு நிறுவன நாள்
/
இந்திய வானிலை ஆய்வு துறை இன்று 150ம் ஆண்டு நிறுவன நாள்
இந்திய வானிலை ஆய்வு துறை இன்று 150ம் ஆண்டு நிறுவன நாள்
இந்திய வானிலை ஆய்வு துறை இன்று 150ம் ஆண்டு நிறுவன நாள்
UPDATED : ஜன 15, 2024 02:53 AM
ADDED : ஜன 15, 2024 02:06 AM

சென்னை: இந்திய வானிலை ஆய்வு துறையின், 150ம் ஆண்டு நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு துறை, 1875ம் ஆண்டில், இந்திய அரசின் முதல் அறிவியல் துறைகளில் ஒன்றாகவும், வானிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் முதன்மை அரசு நிறுவனமாகவும் அமைக்கப்பட்டது.
அதன் 150ம் ஆண்டு நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜன., 15ல், 150 ஆண்டு சேவையை நிறைவு செய்யும். துறையின் அனைத்து அலுவலகங்களிலும், ஓர் ஆண்டுக்கு, 150ம் ஆண்டை கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, ஆண்டு முழுதும் டில்லி முதல், மாநில தலைநகரங்களில் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் வரை, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவின் முதல் வானிலை தரவுகளை பதிவு செய்யும் ஆய்வுக்கூடம், சென்னையில் 1793ல் துவங்கப்பட்டது. இது, ஆசியாவிலேயே மிகப் பழமையான ஆய்வகம். மண்டல அளவிலான வானிலை ஆய்வு மையங்களுக்கு, இந்த ஆண்டு, 80வது நிறுவன ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு துறையின், 150 ஆண்டு கால பொது சேவையின் மகத்தான வரலாறு, தேச வளர்ச்சிக்காக இந்த துறை நிறுவப்பட்டதற்கான சான்றாக உள்ளது. அதை, ஆண்டு முழுதும் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.