PUBLISHED ON : ஆக 11, 2024 12:00 AM

ஏ.ஆலம்கான், அபுதாபியிலிருந்து
அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
புதுடில்லியில், புத்தக வெளியீட்டு
விழாவொன்றில்கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்
கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சல்மான் குர்ஷித், 'வங்கதேசத்தில்
நடக்கும் சம்பவங்கள் இந்தியாவிலும் நடக்கலாம்' என்று வெடிகுண்டு ஒன்றை
கொளுத்தி போட்டு இருக்கிறார்.
பார்லி., தேர்தலில் வென்று
ஆட்சியைப்பிடித்து விடலாம் என கனவு கண்டுகொண்டிருந்த, 'இண்டியா'
கூட்டணிக்கு, அது நிறைவேறாமல் போனதால், மக்கள் வரிப்பணத்தை வீணடித்தபடி,
பார்லி.,யை நடக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.
அனைவருக்குமே எதற்காக நாம் எம்.பி.,பதவியில் அமர வைக்கப்படுகிறோம் என்பதே மறந்த விட்டது போலிருக்கிறது.
இதையாவது,
தொலைந்து போகிறது என்று விட்டு விடலாம் என்றால், வங்கதேசத்தில் நடக்கும்
கலவரம், நம் நாட்டிலும் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறது பாருங்கள்...
அங்கே தான், காங்கிரசின் கோர முகம் வெளிப்படுகிறது.
வங்கதேசத்தில்
நடந்ததை போன்ற சம்பவம் இந்தியாவிலும் நடந்து, மோடியின்பா.ஜ., அரசு
கவிழ்ந்தால், நம் நாட்டு ராணுவம், வங்கதேசத்தில் முகமது யூனுஸை இடைக்கால
மந்திரி சபை அமைக்க அழைத்துள்ளது போல, பிரதமர் கனவில் மிதந்து
கொண்டிருக்கும் ராகுலை, அழைத்து விட மாட்டார்களா என்ற ஆவலில், சல்மான்
குர்ஷித்தை விட்டு, ஆழம் பார்த்து இருக்கின்றனர்.
பலகீனமானவர்களின்
கடைசி ஆயுதம்வன்முறை என்று ஒரு சொலவடை உண்டு. நடைமுறையில் பெண்கள் அந்த
ஆயுதத்தை துவக்கத்திலேயே கையாண்டு, கணவன்மார்களை நோண்டி நுங்கெடுத்து
விடுவது வழக்கம்.
பதவி சுகத்துக்காக இலவு காத்த கிளியாககாத்திருக்கும் காங்கிரஸ் கட்சி அந்த வழிமுறையைத் தான் கையாள்கிறது.
காங்கிரஸ்
கட்சியும், ராகுலும், சல்மான்குர்ஷித்தும், மற்ற இண்டியா கூட்டணிஅரசியல்
கட்சிக்களும் தெள்ளத் தெளிவாக ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் மீது நம் நாட்டு ராணுவத்துக்கு உள்ள வெறுப்பு, நீறுபூத்த நெருப்பாக அடிமனதில் கனன்று கொண்டிருக்கிறது.
ஒரு நாள், இரு நாள் அல்ல... முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது.
காரணம்,
எல்லையில் போர்க்களத்தில் போராடும் ராணுவ வீரர்களுக்கு போரிட துப்பாக்கி
கூட வாங்கி கொடுக்க வக்கில்லாத அரசாக இருந்தது காங்கிரஸ் அரசு.
அறுபதுஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில்இருந்த காங்கிரஸ் கட்சியை
சேர்ந்தவர்கள் யாராவது, ராணுவத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து
இருப்பரா? குண்டு துளைக்காத ஜெர்கின் வாங்கி கொடுத்து இருக்கின்றனரா? கடந்த
பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி, தீபாவளி பண்டிகையை நம் ராணுவ வீரர்களுடன்
தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்!
ஒருவேளை, அந்த சல்மான் குர்ஷித்
கனவு காண்பது போல, வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவிலும்
நடந்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றினால், ஊழல்களை கவனத்தில் வைத்து, ராகுல்
மற்றும் ராகுலின் ஊதுகுழல்சல்மான் குர்ஷித் ஆகியோரின் நினைப்பு பிழைப்பை
கெடுத்து சிறைக்குள் தள்ளும் என்பது மட்டும் நிதர்சனம்.
ஒவ்வொருவரின் கடமை!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இனி மூன்றாவது உலக போர் என்று ஒன்று வருமானால்,அது தாராளமாக தண்ணீர் வைத்துள்ள நாட்டை கைப்பற்றி, தண்ணீரை பெற வேண்டிய பயங்கரபோராக தான் அமையும்.ஏனெனில், தங்கம் மற்றும் வைரத்தை விட தண்ணீர் விலை அதிகமாகும் சூழல் எதிர்காலத்தில் வரப்போகிறது. இன்று, பால் விலையை விட தண்ணீர் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் மழை தண்ணீரை முறையாக சேமித்து பயன்படுத்தாமல், கடலில் வீணாக கலக்க விடுவதால் தான், பல மாவட்டங்களில் தரிசு நிலங்கள் அதிகமாகி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் கீழ் நோக்கி செல்வதால், தமிழகத்தில் பல்வேறு கிணறு, ஊருணிகள் வறண்டு வருகின்றன.பல ஆண்டுகளுக்கு முன்னர் விவசாய தொழிலாளி, வயலுக்கு பாயும் தண்ணீரை தாகத்திற்கு ரசித்து குடித்தான்; ஆனால், இன்று அந்த நிலையை காண்பதே அரிது.
சின்னச் சின்ன கால்வாய்களில் மக்கள் கூட்டம்கூட்டமாக துணி துவைத்து,நீரில் குத்தாட்டம் போட்டு குளித்த நிலை இன்றில்லை.குளங்கள் விவசாய தேவைக்கு உதவின. ஆனால், தற்போது வறண்டு குப்பை கொட்டும் இடமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசு தேவையற்ற வீண் திட்டங்களை அறிவிப்பதை விட, குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளை சீரமைத்து, அவற்றை பாதுகாத்தால், நிலத்தடி நீர் நாளை உயிர் காக்கும் நீராகும்.
இன்று நிலத்தடி நீரை நேரடியாக பெரும்பாலோர் குடிப்பதில்லை; பதிலாக உயிருக்கு கேடு விளைவிக்கும்பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கின்றனர். தண்ணீரை காக்க சிக்கனத்தை விட நீர் நிலைகளைசீரழிக்காமல் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்!
மதுரைக்கு விழா எடுப்பவர்களுக்கு கோரி க்கை!
ஜெ. மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ-மெயில்' கடிதம்: சில ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சியின்போது, 'மாமதுரை போற்றுதும்' என, மதுரைக்கு விழா நடத்தினர்.இப்போதைய தி.மு.க., ஆட்சியில், மாமதுரை என விழா நடத்துகின்றனர்.
விழா எடுப்பதெல்லாம் 'ஓகே!'
l வைகை ஆற்றில் சாக்கடை கலக்கிறதே...
l மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும்அடிக்கடி கழிவுநீர் வெளியாகி, மக்களை முகம் சுளிக்க வைக்கிறதே...
l 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பிரதான சாலைகளிலும், சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நின்று, போக்குவரத்து நெரிசல் தொடர்கிறதே...
l வீடுகளுக்கு வரும் குடிநீரில் சாக்கடை கலக்கிறதே...
l குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், 'பேட்ச் ஒர்க்' கண்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதே...
l பாதாள சாக்கடை மூடிகள் பல இடங்களில் சீரமைக்கப்படாமல் கிடக்கிறதே...
l ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் கதியை, அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லையே...
l மதுரை நகரில் ஓடும் 14 கால்வாய்களுக்கு விமோசனமே கிடையாதா?
இப்போது சொல்லுங்கள்... விழாவெல்லாம் 'ஓகே' தான்!

