sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இப்போது விளங்குகிறதா? அச்சா, அச்சா!

/

இப்போது விளங்குகிறதா? அச்சா, அச்சா!

இப்போது விளங்குகிறதா? அச்சா, அச்சா!

இப்போது விளங்குகிறதா? அச்சா, அச்சா!

10


PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரா.ராஜாமணி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பால்ய பருவத்தில்,பள்ளிக்கூடத்தில் பயிலும் காலத்தில், இங்கிலிஷ் சரிவர புரிபடாத போது, எதிர்காலத்தில் எப்படி சமாளிப்பாய் என்று கேட்டால், 'அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. 'யெஸ், நோ, ஆல்ரைட்' என்ற மூன்று வார்த்தைகளை வைத்தே சமாளித்து விடுவோம்' என்று தெனாவெட்டாக கூறுவது வழக்கம்.

டில்லியில் சமீபத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து பேசிய பின் நிருபர்களிடம், 'புதிய ஆட்சி அமைந்துள்ளதால், ஏற்கனவே இருந்தவர் மாற்றப்பட்டு புதிய அமைச்சர் வந்துள்ளார். இவர்கள் இந்த விவகாரத்துக்கு புதியவர்கள்; நமக்கும் புதியவர்கள்.

'அதனால், 'அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்; மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும்; அதற்காக வந்தேன்' என்ற காரணம் இருந்தாலும், 'நான் துரைமுருகன்... நலம்... நீங்கள் நலமா' என்று கேட்பதை காட்டிலும், எங்களுடைய பிரச்னையை அவர்களிடம் கூற நினைத்தோம்.

'காவிரி, கடல் ஆழம் கண்டவர் கூட தீர்வு காண முடியாத பிரச்னை. முல்லை பெரியாறு அணையும் பிரச்னை. இந்த பிரச்னைகளை தெளிவாக கூறினோம். ஆனால், அவர் அளித்த பதில் தான் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. 'அச்சா... அச்சா...' என்றுதான் பேசுகிறார்.

'அருகிலிருந்த இணையமைச்சர் சோபண்ணாவும் ஹிந்தி. பீஹாரை சேர்ந்த மற்றொரு இணையமைச்சரும் ஹிந்தி. அப்புறம் எப்படி புரியும்? மொத்தத்தில் சந்திப்பு திருப்திகரமாக இல்லை' என்று கூறி இருக்கிறார்.

சந்திப்பு எப்படி திருப்திகரமாக இருக்கும்?

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும், அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக ஹிந்தியையும் பயின்ற போது, தமிழகத்தில் மட்டும் அந்த ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தி, சில பல உயிர் பலிகளையும் கொடுத்து, தடுத்து நிறுத்தி எதை பெரிதாக சாதித்து விட்டீர்கள்?

'ஹிந்தி தெரியாது போடா...' என்று டீ ஷர்ட்டில் எழுதி உலா வந்தீர்களே... இப்போது விளங்குகிறதா அந்த ஹிந்தி மொழியின் மகத்துவம்?

அந்த ஹிந்தி எதிர்ப்பிலாவது உறுதியாக இருந்தீர்களா என்றால் அதுவும் இல்லை!

முதல்வரின் மகள் உட்பட கழகத்தின்கல்வித் தந்தைகள் சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தின்படி நடத்தும் பள்ளிகள் அனைத்திலும், அந்த ஹிந்தியை மட்டுமா கற்றுக் கொடுக்கிறீர்கள்? அரபு மொழியைத் தவிர, உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் அல்லவா கற்று கொடுக்கிறீர்கள்! ஆனால், இந்த இந்திய ஹிந்தியை மட்டும் எதிர்க்கிறீர்கள்; வெறுக்கிறீர்கள்!

சங்க காலத்தில் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தபோது, கிரேக்கம், யவனம் போன்ற நாடுகளுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தபோது, அந்தந்த மொழிகளையும் கற்றுணர்ந்தே இருந்தனர். ஆனால் நீங்களோ, இந்தியாவிலேயே இருக்கும் ஒரு மொழியான ஹிந்தியை எதிர்த்து, என்ன சாதித்து கிழித்து விட்டீர்கள்?

ஹிந்தி என்ற இந்திய மொழிகளில் ஒன்றை, மூச்சை அடக்கி எதிர்த்ததன் விளைவு, இப்போது விளங்கி இருக்குமே!



அடிப்படை புத்திசாலித்தனம் இல்லையே?


எஸ்.ஆர்.திராவிட், ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மத்திய - மாநில அரசு உறவுகள் மூன்று வகைப்படும்.

முதலாவது, அரசு ரீதியான உறவு. இங்கிருக்கும் முதன்மைச் செயலர், துறைச் செயலர்போன்றவர்கள், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறையின் செயலர்களுடன் தொடர்பு கொண்டு, மாநில அரசுக்குத் தேவையான நிதியை, சரியான காரணங்களுடன் சொல்லிப் பெற்று, திட்ட நிறைவேற்றத்தையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் பல முக்கியமான தகவல் பரிமாற்றங்களும் உண்டு.

இரண்டாவது, அரசியல் ரீதியான உறவு. முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர், மத்தியில் பிரதமர், மத்திய அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள்மாநிலத்திற்கான கொள்கை ரீதியான தேவைகளை, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட துறைகளுக்கானநிதியின் தன்மை, வர வேண்டிய நிதி ஆகியவற்றை பொதுவாக விளக்கி, அது குறித்த தகவலை மாநில துறை செயலர்களிடமும், 'பாலோஅப்'புக்காக தெரிவிப்பது. திட்ட நிலைகளை, மத்திய அரசிடம் பகிர்வதும் இதில் அடக்கம்.

மூன்றாவது, நிதிநிலை உறவு. இது, முக்கியமாக வரி வசூலில் வெளிப்படும். சில வரிகள்,மத்திய அரசுக்குச் செல்லும்; சில, மாநில அரசுகளுக்கு வரும். இவற்றைப் பிரிக்கும்நுட்பம் குறித்து, மத்திய - மாநில நிதியமைச்சர்கள், அவர்களின் வழிகாட்டிகளின் ஆலோசனை ஆகியவை அவ்வப்போது நடந்தேறும்.

இந்த நடைமுறையில் தான் மத்திய - மாநில அரசுகளின் உறவு நிலவும்.

ஆனால், ஏரி மேல் கோபித்துக் கொண்டு, 'நெ.2'வைக் கழுவாமல் செல்ல முடியுமா?

அது போல் தான் இருக்கிறது, நம் முதல்வர் 'நிடி ஆயோக்' கூட்டத்திற்கு போக மாட்டேன் என்று சொல்வது!

மத்திய பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயரைச் சொல்லவில்லை என்றால், பொதுவான திட்டங்கள் எதுவும் நம் மாநிலத்திற்குக் கிடையாது என்று அர்த்தமா? அடிப்படை நிதி மேலாண்மை கூட புரியாமல் பலரும் பேசுகின்றனர்; அதற்கேற்றார்போல், முதல்வரும் செயல்படுகிறார்.

மத்திய அரசு கொடுக்கும் பணத்தை, மாநில அரசு முழுமையாகச் செலவழித்தல் முக்கியம். திட்டத்தின் செயல்பாட்டு நிலையை மத்திய அரசுக்கு விளக்க வேண்டியதும் முக்கியம்.

ஒரு உண்மை என்னவெனில், டாஸ்மாக் வருமானம் முழுக்க, மாநில அரசிடம் தான் செல்கிறது; மத்திய அரசு எடுத்துக் கொள்வதில்லை.

மத்திய தணிக்கைத் துறை, 'குறிப்பிட்ட கம்பெனிகளிடமே மது கொள்முதல் செய்கிறீர்கள். ஏன் டெண்டர் விடுவதில்லை?' என கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுவரை அதற்கு, மாநில அரசிடமிருந்து பதில் இல்லை.

அதை விடுங்கள்... விஷயத்துக்கு வருவோம்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதி, அனைத்து மாநிலங்களுக்கும் சொந்தமானது; தன் மாநிலத்திற்குத் தேவையான நிதியை, அந்தந்த மாநிலம், திறம்படப் பயன்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு, குற்றப்பத்திரிகை படிப்பதில் பலன் இல்லை.

இப்படி ஒரு விவகாரத்தை சில முதல்வர்கள் கையில் எடுத்திருக்கின்றனர் என்றால், அவர்களுக்கு அடிப்படை புத்திசாலித்தனம் இல்லை என்று பொருள்.








      Dinamalar
      Follow us