sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

உறைக்குமா இழி பிறவிகளுக்கு?

/

உறைக்குமா இழி பிறவிகளுக்கு?

உறைக்குமா இழி பிறவிகளுக்கு?

உறைக்குமா இழி பிறவிகளுக்கு?

4


PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.குமார், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, -1949ல் பிறந்தவர், அதாவது சுதந்திர இந்தியாவில் பிறந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், 2005 முதல் 2008 வரை ஜம்மு- - காஷ்மீரின் முதல்வராகவும், 2014 முதல் 2021 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும், மத்திய அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.

அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலை பார்த்து, 'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் போட்டியிட அஞ்சுவது ஏன்?' என கேள்வி எழுப்பி இருக்கிறார். பதில் சொல்வாரா ராகுல்?

அது மட்டுமல்ல...

மத்தியில் அந்த 28 கட்சி கிச்சடி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஜம்மு- - காஷ்மீருக்கு நீக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை, மீண்டும் கொண்டு வருவேன் என்றும், அந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உருட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த இண்டியா கிச்சடி கூட்டணியின் வாக்குறுதிகளில் ஒன்றான, மகளிருக்கு பிரதி மாதம் 8,500 ரூபாய், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது எப்படி நிறைவேற்ற இயலாத வாக்குறுதியோ அதுபோல, விலக்கிக் கொள்ளப்பட்ட ஜம்மு - - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை, எந்த அரசியல் கட்சியும் தலைகீழாக நின்று, தண்ணீர் குடித்தோ, குடிக்காமலோ, சிரசாசனம் செய்தோ மீண்டும் சிறப்பு அந்தஸ்தை கொண்டு வர முடியாது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களும், தற்போது இந்தியாவுடன் இணைய காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதோடு, 'காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. இங்கு அதிக சுற்றுலா பயணியர் வருகின்றனர். அதனால் இங்கு உள்ள மக்கள் அதிகம் பயனடைகின்றனர். இது பிடிக்காமல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவி விடுகிறது. பாக்., ஆட்சியாளர்கள், முதலில் தங்கள் நாட்டை கவனிக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார் குலாம் நபி ஆசாத். அவர் தற்போது, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார்.

நன்றாக கவனியுங்கள்...

குலாம் நபி ஆசாத், ஹிந்து அல்ல; இஸ்லாமியர்; முன்னாள் காங்கிரஸ்காரர்.

அவர் கூறியுள்ளதை சிந்தித்து பார்த்தீர்களா?

எப்படி ரோமாபுரியில் இருந்தால், ரோமானியனாக இரு என்று சொல்வரோ அதுபோல, இந்தியாவில் இருந்தால், இந்தியனாக இரு என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை.

குலாம் நபி ஆசாத் அந்த கொள்கையைத் தான், முறையாக, செம்மையாக, முழுமையாக, மனப்பூர்வமாக, மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார். பிரிவினையை துாண்டும், பிரச்னைகளை உருவாக்க காத்திருக்கும் மனிதாபிமானமும், தேசப்பற்றும் அற்ற இழி பிறவிகளுக்கு குலாம் நபி ஆசாத்தின் அறிவுரை உறைக்குமா?



என்று அமையுமோ தெரியவில்லை!


வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநிலத்தில் உள்ள கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்து என, தற்போதுள்ள நிர்வாக அமைப்பை கலைத்து விட்டு, வரும் டிசம்பருக்குள் தேர்தலை நடத்த, மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

வரும் 2026 சட்டசபை தேர்தல், கடும் போட்டியுடன் பல மாற்றங்களுடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மாநிலம் முழுதும் உள்ளாட்சி நிர்வாகத்தில், 90 சதவீத இடங்களை, தி.மு.க., தரப்பு கைப்பற்றி பதவியில் உட்கார்ந்து விட்டால், எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, மிக மிக எளிதாக இருக்கும் என்பது தி.மு.க.,வின் கணக்கு.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, உள்ளாட்சி நிர்வாகத்தில் புதியவர்கள் மாறி மாறி வந்தபோதிலும், மக்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் அடிப்படை வசதிக்கு அல்லாடியபடி தான் இருக்கின்றனர்.

ஐந்தாண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை விட, ஐந்தாண்டுகளில் எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை, அரசியல்வாதிகள் கணக்கு போடுகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்தால் தான் சம்பாதிக்க முடியும் என, தங்கள் நிலையை மாற்றி கொள்கின்றனர். கிராம பஞ்சாயத்து முதல் மாநகர் வரை நடைபெறும் பணிகள், பெரும்பாலும் தரம் இல்லாதவையாக இருக்கின்றன.

வடிகால் வசதியின்மை, சிறு மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாத சாலைகள், குண்டும் குழியுமான ரோடுகள், அள்ளப்படாத குப்பை, தெருநாய் தொல்லை, குடிநீரில் சாக்கடை கலந்து வருவது...

சீரான குடிநீர் வினியோகமின்மை, எரியாத தெருவிளக்கு, பகலில் பல இடங்களில் எரியும் தெரு விளக்கு, முறையாக சுத்தப்படுத்தப்படாத குடிநீர் தொட்டிகள், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்துதல், பணியே செய்யாமல் கணக்கு காட்டி நிதியை சுருட்டுவது, கழிவு மேலாண்மையில் பெரும் பின்னடைவு குப்பையை குப்பைத் தொட்டில் வைத்தே தீ வைத்து விடுவது, பராமரிக்கப்படாத சுகாதார வளாகங்கள், பன்றி - கொசு தொல்லை என, மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

வரும் சட்டசபை தேர்தலில், உள்ளாட்சி நிர்வாக அமைப்பில் பதவியில் உள்ள தி.மு.க., தரப்பினரை, அப்படியே ஓட்டு வேட்டைக்கு பயன்படுத்தலாம்; வேலைப்பளு குறையும்; சாதகமாக இருக்கும் என கணக்கு போடுகின்றனர்.

இந்த சிந்தனையிலிருந்து மாறுபட்டு, மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சி என்று அமையுமோ, தெரியவில்லை!



ராஜுவின் கணக்கு வெட்டவெளிச்சம்!


என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக, 'வித்தியாசமாக' கருத்துக்களை உதிர்த்து, 'வெளுத்து' வாங்குவார்.

வைகையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல் போட்டு மூடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்து, உலகையே, 'அசர வைத்த' பெருங்கோமான் அவர். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து, தமிழகத்துக்கு நல்ல விஷயங்களைச் செய்வார் என இன்னுமா இவரிடம் எதிர்பார்ப்போம் எனக் கருதும் வகையில், மற்றுமொரு தடாலடி அறிக்கை விட்டிருக்கிறார்.

'காங்., ராகுல், எளிமையானவர், இனிமையானவர், இளமையானவர்; அவரின் செயல்பாடுகள் என்னை புல்லரிக்க வைக்கின்றன' என புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

கட்சித் தலைவர் பழனிசாமி சும்மா இருப்பாரா... கும்மாங்குத்து போட்டார் போன் மூலம். உடனே தற்போதைக்கு வாயைப் பொத்திக் கொண்டாலும், எதிர்காலத்தில் தன் கட்சி காலாவதியாகி விடுமோ என்ற பயத்தில், காங்கிரசுக்குத் துண்டு போட்டு தாவி விடலாம் என்று தெர்மோகோல் ராஜு கணக்கு போட்டிருக்கிறார் என்பது, தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது.








      Dinamalar
      Follow us