PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

ஆர்.நடராஜன், வங்கி அதிகாரி (பணி நிறைவு), கோவையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மாற்றுக் கட்சியினர் கூட, 'ஸ்டாலின், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உடையவர்; எம்.எல்.ஏ., மேயர், அமைச்சர், துணை முதல்வர் என, பல்வேறு பதவிகளில் இருந்தவர் என்பதால், சிறப்பாக ஆட்சி செய்வார்' என்று நம்பினர்.
அதேநேரம், ஒரு விஷயத்தை மறந்து விட்டனர். இவரது தந்தை கருணாநிதி, ஐந்து முறை முதல்வர் பதவி வகித்தும், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் வந்து ஆட்சி செலுத்தினாரே தவிர, ஸ்டாலினை முதல்வர் சீட்டில் அமர வைத்து அழகு பார்க்கவில்லை.
'கருணாநிதி பதவி ஆசை கொண்டவர்; அதுதான் தன் மகனுக்கு கூட முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்காமல், நாற்காலியை இறுகப்பற்றிக் கொண்டுள்ளார்' என்றெல்லாம் விமர்சித்தனர்.
ஆனால், உண்மை அது அல்ல... தன் மகனால் பிரச்னைகளை சமாளித்து திறம்பட ஆட்சி நடத்த முடியாது என்று உணர்ந்ததால் தான், அவர் ஆட்சிப் பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுக்கவில்லை என்பது, தற்போது நிரூபணம் ஆகிவிட்டது.
இவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அன்றாடம் பிரச்னைகள்... அதை சமாளிக்க, அவ்வப்போது, 'சர்வாதிகாரியாக மாறுவேன்' என ஒரு மிரட்டல்!
அதேநேரம், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவுடன், அவர்களை வரவேற்று, சால்வை அணிவித்து ராஜமரியாதை செய்கிறார்; சிறையில் இருந்து திரும்பி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கோ தியாகி பட்டம் சூட்டுகிறார்!
தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழி என்பது போல், திருவண்ணாமலையில், 'சுவாமி தரிசனம் செய்ய இடையூறு செய்ய வேண்டாம்' என எச்சரித்த பெண் காவலரை தாக்கிய ஸ்ரீதர் என்பவர், முதல்வரின் பிறந்த நாளுக்கு சிங்கம் சிலை கொடுத்து புகைப்படம் எடுக்கிறார்...
அண்ணாபல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரன், அமைச்சர்களுடன் ஒட்டி உறவாடிய புகைப்படங்கள் சந்தி சிரித்தது.
ஹிந்தி எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில், கையை நீட்டும் பெண்ணின் கையைத் தொட்டு, வளையலை உருவுகிறார் ஒரு தி.மு.க., கவுன்சிலர்...
தர்மபுரி மாவட்ட தி.மு.க., செயலரோ, தான் சொல்வதை கேட்காவிட்டால், கலெக்டரும், காவல்துறை ஆணையரும் பணியாற்ற முடியாது என்று மிரட்டுகிறார்.
இப்போது புரிந்ததா கருணாநிதி ஏன் ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமரவைக்கவில்லை என்பது!
கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி தான்!
கண்ணீருக்கு முற்றுப்புள்ளி எப்போது?
பி.முனுசாமி,
திண்டுக்கல்லில் இருந்து எழுதுகிறார்: நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான
கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்ததும், ராமேஸ்வரம் - இலங்கை
தலைமன்னார் இடையே படகு சேவை விரைவில் துவக்கப்படும் என்று அறிவித்ததும்,
நல்ல விஷயம் தான். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா மற்றும்
வர்த்தக நடவடிக்கைகள் மேம்படும் என்று உறுதியளித்தது மிக்க சந்தோஷம்!
அதேநேரம்,
ராமேஸ்வரம் மற்றும் பல பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும்
மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
படகோட்டி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., பாடிய, 'தொடர்ந்தால் தொடரும்...
முடிந்தால் முடியும் இதுதான் எங்கள் வாழ்க்கை' என்பது போல்தான் மீனவர்களின்
வாழ்க்கை உள்ளது.
ராமேஸ்வரத்தில் பிறந்த, மறைந்த முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாம் காலத்திலேயே அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே...
நம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் எந்த
நேரத்தில் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று, பயந்து பயந்து மீன் பிடிக்க
செல்கின்றனர்.
அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பும்
இல்லை; பரிதாப உணர்வும் இல்லை. பிரதமர் முதலில், மீனவர்களின் கண்ணீருக்கு
முற்றுப்புள்ளி வைக்கட்டும்; பின், இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா
மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை எடுக்கலாம்!
சிரிப்புக்கு இடமான டிரம்ப்!
மு.நெல்லை
குரலோன், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்க
அதிபர் டிரம்ப், -- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில்
வெடித்த பகிரங்க மோதல், இன்று உலகளவில் பேசுபொருளாக விஸ்வரூபம்
எடுத்துள்ளது.
காரணம், அந்த இருநாடுகளின் அதிபர்கள் இடையே யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, காரசாரமாக வாக்குவாதம் நடந்தது தான்!
அது அப்படியே நேரலையில் வெளிச்சத்துக்கு வந்தது, உலக வரலாற்றில் இதுவே முதல் முறை!
மிகவும்
ரகசியமாக நடந்திருக்க வேண்டிய பேச்சு, பொதுவெளிக்கு வந்ததன் காரணமும்,
பின்னணியும் ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பியுள்ளதோடு, உலக அரசியலின்
நிச்சயமற்ற போக்கினைப் பற்றிய அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
சில
மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி, 'இது போருக்கான காலம் இல்லை' என்று
சொல்லி, ரஷ்யா --- உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு
வந்தார். அவருடைய ஆக்கப்பூர்வமான செயல், உலக மக்கள் அனைவராலும்
போற்றப்பட்டது. கூடவே, 'உலக சமாதான துாதுவர்' என்ற பிம்பமும் அவருக்கு
கிடைத்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன், 'உலகில் போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டப் போகிறேன்' என்று முழங்கினார்.
இதை
உன்னிப்பாக கவனித்த சீனா, உடனே, 'ரஷ்யா --- உக்ரைன் போரை முடிவுக்குக்
கொண்டு வருவதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று அறிவித்தது.
உலகில்
பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் இவ்வாறு அறிவிக்கவே,
சமாதான முயற்சியில் ஈடுபாடு காட்டிய மோடி, உலக ஊடகத்தின் கவனத்தை
ஈர்க்கவில்லை.
உலக அரங்கில் சமாதான துாதுவராக மோடி புகழ்பெறக்
கூடாது என்ற பயத்தில், இரு வல்லரசு நாடுகளும் போட்டி போட்டதில், வெள்ளை
மாளிகையில் நடந்த டிரம்பின் செயல்பாடு, அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தும்
நிலைக்கு கொண்டுவந்து விட்டது.
இதே உக்ரைன் ---- ரஷ்யா போர்
நிறுத்த பேச்சு மோடி முன்னிலையில் நடந்திருந்தால், வெள்ளை மாளிகையில் நடந்த
மாதிரியான கேலிக் கூத்துகளோ, நீர்த்துப் போன ராஜதந்திர நடவடிக்கைகளோ
அரங்கேறி இருக்காது; உலகமே கேலியாக சிரிக்கும் அவலமும் நடந்திருக்காது!
எரியும்
வீட்டில் பிடுங்க நினைத்தார் டிரம்ப்; நடக்கவில்லை என்றதும், தன் உண்மை
முகத்தை காட்டிவிட்டார். சமாதான துாதுவராக புகழ்பெற நினைத்த டிரம்ப், இன்று
உலக அரங்கில் வில்லனாய், கேலிப்பொருளாய் ஆகிவிட்டார்!