sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!

/

மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!

மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!

மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!

10


PUBLISHED ON : ஜூன் 21, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 21, 2024 12:00 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வயநாடு மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு வெற்பெற்ற ராகுல் இப்போது, வயநாடு தொகுதியை தன் அருமை சகோதரி பிரியங்காவுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார்.

ராகுலின் தாய் சோனியா, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., ஆக உள்ளார். இப்போது பிரியங்காவும் வெற்றி பெற்று விட்டால், ஒரே குடும்பத்தில் மூன்று எம்.பி.,க்கள் இருப்பர். பிரியங்காவின் கணவரும் எதிர்காலத்தில் எம்.பி.,யானால் ஆச்சரியம் இல்லை.

நேரு, இந்திரா, ராஜிவ் என, ஒரே குடும்பத்தின் மூன்று பேர் பிரதமராக இருந்தனர். இப்போது அவர்களது வழித்தோன்றல்கள் மூன்று பேர் எம்.பி.,க்களாக உள்ளனர்.

நம்மூர் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்திலும், பல பேர் அமைச்சர்களாக, எம்.பி.,க்களாக பதவி வகித்து வருகின்றனர்.

அந்த காலத்தில், மன்னராட்சியில் தான் பரம்பரை பரம்பரையாக மன்னர் பதவிக்கு வர முடியும். மக்களாட்சியிலும், பரம்பரை பரம்பரையாக பதவிகளுக்கு வர முடியும் என்பதை, நேரு குடும்பமும், கருணாநிதி குடும்பமும் நிரூபித்துக் காட்டி விட்டன.

ராகுலுக்கு திருமணம் ஆகாததால், அவருக்குப் பின் யாரும் எம்.பி., ஆக முடியாது. ஆனால் பிரியங்காவின் பரம்பரை, இந்த நாட்டை தொடர்ந்து ஆளும் என்று சொல்லலாம்.

பிரதமர் மோடியும் பிரம்மசாரியாக வாழ்வதால், அவருக்குப் பின் யாரும் எம்.பி.,யாக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நேருவின் பரம்பரை, அரசியலில் கோலுச்சுமோ அது அந்த ஆண்டவனுக்கே தெரியும்.

மஹாத்மா காந்தி, வல்லபபாய் படேல் போன்றோரின் வாரிசுகள் நாட்டை ஆளக் கிளம்பாதது ஏன் என்று தெரியவில்லை.



பயணியரின் உயிருடன் விளையாடாதீர்!


சாந்தி தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில், 20,000 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் ஒரு சில நேரங்களில் பழுதாகலாம். பேருந்துகளில் ஏற்படும் பழுதுகள் குறித்து சுட்டிக் காட்டுவது தவறல்ல. ஆனால், அதை பெரிதுபடுத்த வேண்டாம். இது, இரவு பகலாக பணியாற்றுவோரை அவமதிப்பது போல் உள்ளது' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.

மத்திய அரசு, 15 ஆண்டு களை கடந்த பேருந்துகளைத் தான் காலாவதியான பேருந்துகள் என்று கூறுகிறது. அதற்காக, அந்த 15 ஆண்டுகளும், பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டியதில்லை என்று கூறவில்லையே!

பராமரிப்பு வேலைகள்முறையாக நடக்காததால்தான் டயர்கள் தனியாக கழன்று ஓடுவது, படிக்கட்டுகள் உடைந்து விழுவது, ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட பெரிய ஓட்டை வழியாக ஒரு பெண் சாலையில் விழுந்து உயிரிழந்திருக்க வேண்டிய ஆபத்திலிருந்து நுாலிழையில் தப்பியது...

பிரேக் பிடிக்காமல் போவது, பேருந்துகளை அடிக்கடி பயணியர் தள்ள வேண்டிய நிலை ஏற்படுவது, சென்டர் ராடு உடைந்து நடுவழியில் நிற்பது, மழை பெய்தால் பேருந்துகளுக்குள் குடை பிடிக்க வேண்டிய அவல நிலை ஏற்படுவது போன்ற பல இன்னல்களை பயணியர் அனுபவிக்க நேரிடுகிறது.

அது மட்டுமா... காற்று வாங்கலாம் என்று கண்ணாடி ஜன்னலை திறக்க முயன்றால் திறக்காது. குளிர்கிறது என்று கண்ணாடி ஜன்னலை மூட நினைத்தால், மூடவும் முடியாது. ஏனென்றால், அங்கு கண்ணாடியே இருக்காது.

இந்த அரசு பேருந்து சாலையில் இயக்குவதற்கு தகுதியில்லாது என்று கூறி ஓட்டுனரே, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பேருந்துடன் சென்று புகார் கொடுத்த வரலாறும் உண்டு.

எனவே, எப்போதாவது அரசு பேருந்து பழுதாகிறது என்று அமைச்சர் கூறுவது சரியல்ல; எப்போதும் பழுதாகிறது அல்லது எப்போது வேண்டுமானாலும் பழுதாகலாம் என்ற நிலையில் தான், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் தான், சமூக அக்கறையுடன் பத்திரிகைகள் அதை சுட்டிக் காட்டுகின்றன.

அப்படி சுட்டிக் காட்டுவதை கூட பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர், 'சில நேரங்களில் பேருந்துகள் பழுதாவதை பெரிதுபடுத்த வேண்டாம். அது, இரவு பகலாக பணியாற்றுவோரை இழிவுபடுத்துவது போல் உள்ளது' என்கிறார்.

இதில் இழிவுபடுத்த என்ன இருக்கிறது? சமீபத்தில், குமுளி மலைப்பாதையில் பிரேக் பிடிக்காத ஒரு பேருந்தை, பாறையில் மோதி நிறுத்தினார் ஓட்டுனர். அந்தபேருந்து எதிர்புறம் பள்ளத்தில் பாய்ந்திருந்தால் பலர் உயிரிழந்திருப்பர். எனவே, இனிமேலாவது தரமில்லாத பேருந்துகளை இயக்கி, பயணியரின் உயிருடன் விளையாடாதீர்கள்.



சிறகொடிந்த பறவையாக அ.தி.மு.க.,


வா.தியாகராஜன், கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் இப்பகுதியில் வாசகர் ஒருவர், 'பீனிக்ஸ் பறவையாக அ.தி.மு.க., எழும்' என்ற தலைப்பில் எழுதி உள்ள கருத்துகள் ஏற்புடையதல்ல. கட்சியின் சில கடினமான காலகட்டங்களில் வெற்றிக்கான சூத்திரங்களை வகுத்து, கட்சியை எழுச்சி பெற வைத்து வெற்றி பெற வைத்தவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்.

வாசகர் கூறியது போல, 1996 சட்டசபை தேர்தலில் வெறும் நான்கு எம்.எல். ஏ.,க்களுடன் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது; ஜெ., இரண்டு தொகுதிகளிலும் தோற்று போனார். மறுபக்கம், கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு வரிசையாக தொடர்ந்த ஊழல் வழக்குகள் வேறு. ஒரு வழக்கில் ஜெ.,வே 28 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

'இனி அ.தி.மு.க., அவ்வளவு தான்... ஜெ., வெளிநாட்டுக்கு சென்று விடுவார்' என்றெல்லாம் தி.மு.க.,வினர் எள்ளி நகையாடினர். ஆனால், கட்சியை கட்டமைத்து, 1998 லோக்சபா தேர்தலில் பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்து, 40க்கு 30 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஜெயலலிதா. அதன்பின், 2001 சட்டசபை தேர்தலில் வென்று, ஆட்சியையும் பிடித்தார் என்பது வரலாறு.

அவரை போன்ற மக்கள் செல்வாக்கும், ஆளுமையும், மதியூகமும் இப்போதைய பொது செயலர் பழனிசாமிக்கு இல்லை என்பதே உண்மை. கட்சியின் வளர்ச்சி, மேல் மட்ட தலைவர்கள் கையில் மட்டும் அல்ல; என்னை போன்ற, 40 ஆண்டு கால தொண்டனின் கையிலும் உள்ளது என்பதை பழனி சாமி புரிந்து கொள்ள வேண்டும்.

பழனிசாமி உள்ளிட்ட ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாக இருந்தால் மட்டுமே, வாசகர் சொல்வது போல், 'பீனிக்ஸ் பறவை'யாக கட்சி எழ முடியும்; இல்லையெனில் சிறகொடிந்த பறவையாக தத்தளிக்க நேரிடும்.








      Dinamalar
      Follow us