sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?

/

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?

2


PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.முகம்மது இஸ்மாயில், பெங்களூரில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடித்த, ஒளிவிளக்கு என்ற அவரது, 100வது படத்தில், அவரது மனசாட்சியைப் பார்த்து, 'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா? மனிதன் தானா? இல்லை; நீ தான் ஒரு மிருகம்' என்று பாடுவார்.

அந்த கேள்வியை நாம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பார்த்து கேட்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறோம்.

'மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பைரோன் சிங், உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார். இந்த தோல்வி மன்னிக்க முடியாதது' என்று, அனல் கக்கி இருக்கிறார் அண்ணன் கார்கே.

கார்கேயின் இந்த வார்த்தைகளில் இருந்து, ஒரு விஷயம் தெளிவாகிறது.

அதாவது, தோல்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று மன்னிக்கக் கூடிய தோல்வி; மற்றது மன்னிக்க முடியாத தோல்வி.

மணிப்பூர் கலவரம், இன்று நேற்று துவங்கியதல்ல; பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கும் கலவரம். சுருக்கமாக சொன்னால், அந்த கலவரம் துவங்குவதற்கும், நீடித்துக்கொண்டிருப்பதற்கும் காரணமே காங்கிரஸ் கட்சி தான்.

சில நாட்களுக்கு முன்பு தான், அங்குள்ள தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்து, பேச்சு வார்த்தைக்கு தயாரானதாக ஒரு செய்தி வெளியானது; அதற்குள் அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த கலவரத்தின் பின்னணியை நோண்டி நுங்கெடுத்தால், அதில் பல காங்கிரஸ் தலைகளின், 'கை' வரிசை இருப்பது தெரியவரும். அப்படி எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவு தான், கார்கேயின் இந்த மன்னிக்க முடியாத, தோல்வி அறிக்கை.

இந்தியாவில் மேற்கு வங்கம் என்றுஒரு மாநிலம் உள்ளது. காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும், 'இண்டியா' கூட்டணியின் மற்றொரு அங்கமான, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தீதி மம்தா தான், அங்கு முதல்வியாக கோலாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

அந்த மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்த ஒரு பெண் டாக்டர், பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அந்த கொலை சம்பவத்தின் வீரியத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம், தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., வாயிலாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிறது.

மணிப்பூர் கலவரத்துக்காக வக்காலத்துவாங்கி, பைரோன் சிங்கை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் மோடி முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார் என்றும் பொங்கிய,புண்ணிய புருஷன் மல்லிகார்ஜுன கார்கே, இந்த கோல்கட்டா பயிற்சி மருத்துவ கல்லுாரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து, இதுவரை மூச்சுக் கூட விடவில்லை.

இப்போது கேட்போம் கார்கேவை... தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?



என்ன உலகமடா சாமி!


எம்.கல்யாணசுந்தரம், கணபதி புதுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்பெல்லாம் சிறைக் கைதிகள், கஞ்சிக்கே கஷ்டப்பட்டனர்; இன்று சிறையில் சொகுசு வாழ்க்கை.

நல்ல சாப்பாடு, டிபன், பழங்கள், பத்திரிகைகள், முதல் வகுப்பு, பாதாம் பருப்பு என்று, சுகபோக வாழ்க்கை சொல்லி மாளாது. பெங்களூரு பரப்பனஹள்ளி அக்ரகாரம் சிறை, கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு தெரிந்த சிறையாக அமைந்து விட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., மறைவிற்கு பின், சசிகலா குழுவினர் அங்கே அடைக்கப்பட்டு, அதை சொகுசு விடுதியாக மாற்றியது மட்டுமில்லாமல், வெளியில் சென்று, 'பர்ச்சேஸ்' செய்யக்கூடிய சுதந்திரம்அந்த சிறைச்சாலையில் கொடுக்கப்பட்டது என்றால், அதன் லட்சணத்தைக் கேட்கவே வேண்டாம்.

தற்போது, அதே சிறையில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்.

சிறை வளாகத்தில் தன் சொந்த வீட்டில்இருப்பது போல் கையில் சிகரெட் வைத்தபடி, ஹாயாக, மற்ற கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணும்போது, சிறைச்சாலைகள் திருத்தும் இடமாக இல்லாமல், ஓய்வெடுக்கும் சொகுசு இடமாக மாறிவிட்டது. சமீபமாக, அவருக்கு, 'டிவி' வழங்கப்பட்டுள்ளதுஎன்றும் தெரிகிறது.

பெல்லாரி சிறைக்கு நடிகர் மாற்றப்பட்டதும்,அங்கும் ரசிகர்கள் அவரை காண ஓடுகின்றனர்.அதைவிட ஒரு பெண், அவரை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறுகிறார் எனில், மக்கள் எப்படிப்பட்ட கோமாளிகள் என்பது புரிகிறது.

என்ன உலகமடா சாமி!



பா. ஜ.,வும் விதிவிலக்கல்ல!


சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு - காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட பின், அம்மாநிலத்தில் முதன்முதலாக மூன்று கட்டங்களாக இம்மாதம், 18ல் துவங்கி, அக்., 1 வரை சட்டசபை தேர்தல்நடக்க இருக்கிறது. இந்நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பலகட்சிகள், தேர்தல் அறிக்கை வெளியிடும் நிலையில், மத்தியில் கூட்டணி ஆட்சி செய்யும்மோடி தலைமையிலான அரசும், தன் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

அதில், தமிழகத்தில் திராவிட கட்சிகள் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள், குறைகளை பா.ஜ., கூறியிருந்ததோ, அந்த வாக்குறுதிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக,பெண்களுக்கு ஆண்டிற்கு18,000 ரூபாய் ரொக்கம், விவசாயத்திற்கு குறைந்த மின் கட்டணம், ஆண்டுக்கு இரண்டு இலவச காஸ் சிலிண்டர்கள் என, வாக்குறுதிகளை வாரி விட்டுள்ளது.

கூடவே, வேட்பாளர்பட்டியலில், வாரிசுஅரசியலும் இடம்பெற்றுள்ளது. அங்கு அரசியல் சட்டப்பிரிவு370ஐ நீக்கம் செய்தபின், நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், அதற்கான அங்கீகாரத்தை பெறவே, இதுபோன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை பா.ஜ.,வும் அறிவித்துள்ளது.

தான் செல்லும் இடங்களில் வளர்ச்சி குறித்து பேசும் பிரதமர்மோடியின் கருத்துக்களுக்கு எதிராகவே, இந்த தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, தேர்தல் அரசியலுக்கு, பா.ஜ.,வும் விதிவிலக்கல்ல என்றே எண்ண தோன்றுகிறது.








      Dinamalar
      Follow us