sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எடுபடுமா நாடக அரசியல்!

/

எடுபடுமா நாடக அரசியல்!

எடுபடுமா நாடக அரசியல்!

எடுபடுமா நாடக அரசியல்!


PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்புக்கான சலுகை, பணி நிரந்தரம் ஆகிய மூன்று முக்கியமான அரசு ஊழியர்களின் கோரிக்கையை, நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றாத திராவிட மாடல் அரசு, மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டுள்ளது. இதேபோல் மருத்துவர்கள், செவிலியர், மாணவர்கள், மீனவர் என அனைத்து தரப்பு மக்களையும் குறிவைத்து, வாரி வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் போலி என்பதை மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

பிரசாந்த் கிஷோரின் தவறான வழி காட்டுதலால், நடைமுறைக்கு சாத்தியமேஇல்லாத வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இப்போது நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

அதனால், மக்களின் கவனத்தை திசை திருப்ப ஹிந்தி திணிப்பு, லோக்சபா தொகுதி குறைப்பு என்று இல்லாத விஷயங்களைக் கையிலெடுத்து, கம்பு சுற்றத் துவங்கியுள்ளார்.

திராவிடப் பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்கும், 'ஹிந்தி எதிர்ப்பு' என்ற பழைய துருப்பிடித்த ஆயுதத்தால், தமிழகத்தில் இனி வெங்காயத்தைக்கூட வெட்ட முடியாது என்பது வேறு விஷயம்!

தமிழக அரசியல் கட்சிகளின் பித்தலாட்டங்களை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டனர். தங்கள் பள்ளிகளில் ஹிந்தியை கற்றுக் கொடுத்துக் கொண்டே அதற்கு எதிராகப் போராடுவது, சாராயத்தை ஆறாகப் பெருகவிட்டு, 'போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என்று போலித்தனமாகப் பேசுவது, 'தமிழகத்தில் மதுவால் இளம் விதவைகள் எண்ணிக்கை பெருகிவிட்டது' என்று நீலிக்கண்ணீர் வடித்தது என, எல்லாமே நாடகம் என்பது பாமர மக்களுக்குக் கூட இப்போது புரிந்துவிட்டது.

இன்னொருபுறம், தமிழக வாக்காளர்களை நம்பாமல், குறுக்கு வழியில் சென்றால்தான் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த முடியும் என்பதை புரிந்து கொண்ட நடிகர் விஜய், தன் முதல் தேர்தலுக்கே பிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்துள்ளார்.

அரசியல் பள்ளியில் ஆரம்பக்கல்வியேகற்றுத்தேராத விஜய், ஹிந்தி பயிற்றுவிக்கும் பள்ளியை நடத்தியபடி, ஒரு ஹிந்தி ஆலோசகரை மேடையில் வைத்துக்கொண்டு, கொஞ்சம்கூட வெட்கமில்லாமல்ஹிந்தி எதிர்ப்பு கையெழுத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

கடந்த தேர்தலில் தி.மு.க.,வை வெற்றி பெறச்செய்த பிரசாந்த் கிஷோர், இம்முறை, தமிழகத்தில் ஊழலையும், வாரிசு அரசியலையும் ஒழிக்கப் போவதாக, தனக்கு சம்பந்தமே இல்லாத தமிழகத்தில் வந்து கூறுகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,விடம் பல நுாறு கோடிகளை வாங்கியபோது, ஊழலும், வாரிசு அரசியலும் இவர் கண்ணுக்குத் தெரியவில்லையா அல்லது 'நாய்விற்ற காசு குரைக்காது' என்பது போல் ஊழலால் கிடைத்த பணம் உறுத்தவில்லையா?

தமிழகத்தில் நாடக அரசியல் நடத்துவோருக்கும், பிரசாந்த் கிேஷார் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கும் வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பித்தால் மட்டுமே, இதுபோன்ற குறுக்குசால் அரசியல்வாதிகள் திருந்துவர்!

  

கோடையை சமாளிக்க!


ரெ.ஆத்மநாதன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சென்னையில், மார்ச் மாதம் ஆரம்பத்திலேயே வெயில் தகிக்க ஆரம்பித்து விட்டது.

தென் தமிழகத்தில் மழை பொழிந்தே அல்லல்படுத்தி வந்த வருணபகவான், வட தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், 'ஆப்சென்ட்' ஆகி விடுகிறார்.

இந்நிலையில், மாநிலத்தின் வெப்பநிலை, 3 டிகிரி அதிகரிக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையுடன் ஒப்பிடுகையில், கோவையில் வெப்பம் குறைவாகவே இருக்கும். ஆனாலும், கோடை ஆரம்பித்தவுடனேயே நகரின் முக்கியச் சாலை சந்திப்புகளில், சிக்னலுக்காக காத்து நிற்கும் வாகன ஓட்டிகளை, கடும் வெப்பத்திலிருந்து காக்கும் விதமாக, அவர்கள் நிற்கும் இடங்களில் பந்தல்கள் அமைத்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

இதுபோன்று, சென்னை மற்றும் தமிழகத்திலுள்ள பெரு நகரங்களிலும் அமல்படுத்தலாம். இதனால்,வாகன ஓட்டிகள்சிக்னலுக்காக காத்திருக்கும்போது, வெயிலால் வாடி வதங்க மாட்டார்கள்!

அதேபோன்று, நடை பாதைகளுக்கும் ஆங்காங்கே நிழற்குடை அமைத்தால், பாதசாரிகள்நிழலில் நின்று சற்றே இளைப்பாறிச் செல்வர்!

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே!

கடுங்கோடையை சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அனைவருக்கும் பயனளிக்கும்!

அரசு செயல்படுத்துமா?

  

கோயபல்ஸ் ஆகும் சேகர்பாபு !


எஸ்.இளமுகன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், நாட்டு மக்களிடையே பொய்யை பரப்புவதற்கென்றே சம்பளம் கொடுத்து, 'கோயபல்ஸ்' என்பவனை நியமித்து வைத்திருந்தானாம்!

அதுபோன்று திராவிட மாடல் அரசு, பொய்யை பரப்புவதற்கு என்றே பலரை நியமித்துள்ளது. அவர்களில் முதன்மையானவர் ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு!

'தமிழகம் வரும்போதெல்லாம், இங்கு புதிய பிரச்னைகளை உருவாக்கி, மக்களை திசைதிருப்ப பார்க்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. தமிழகம் வந்தால், 'தமிழை விரும்புவேன்' என்பார்; உத்தர பிரதேசம் சென்றால், 'ஹிந்தியை விரும்புவேன்' என்பார்' என்று கூறி உள்ளார் சேகர்பாபு.

இவர் கருணாநிதியின் மேடை பேச்சுகளை கேட்டிருக்க வாய்பில்லை; காரணம், அப்போது ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடந்தார் சேகர்பாபு... அதனால் அவருக்கு கருணாநிதி பேசியது தெரிந்திருக்காது தான்!

கருணாநிதி தலித் மக்களின் கூட்டத்தில் உரையாற்றும் போது, 'நான் தலித் மக்களின் சம்பந்தி' என்பார். அதாவது, அவரது மகன் அழகிரியின் மனைவி அந்த இனத்தை சார்ந்தவராம்!

நாடார்கள் கூட்டத்தில் பேசும் போது, 'இது நாடார்களின் அரசு' என்பார். அவரை எதற்கும் நாடாதவர்களாம்... நாடி இருந்தால் நன்மை செய்து இருப்பாராம்...

செட்டியார்கள் கூட்டத்தில்,'இது செட்டியார்களின் அரசு' என்பதும், முதலியார்களிடம் பேசும் போது, பக்கத்தில் இருக்கும் அன்பழகனை காட்டி, 'இது முதலியார்களின் அரசு' என்பதும், எந்த ஜாதிக் கூட்டத்தில் உரையாற்றினாலும், அந்த இன அரசு என்பதும் கருணாநிதியின் வழக்கம்.

அவர் பிராமணர் கூட்டத்தில் பேசியதாக தெரியவில்லை. அப்படியே பேசும் வாய்ப்பு கிட்டியிருந்தால், 'இது பிராமணர்களின் அரசு; என் ஆடிட்டர், என் வழக்குகளை நடத்தும் வக்கீல், குடும்ப டாக்டர், யோகா பயிற்றுவிப்பவர் அனைவருமே பிராமணர். அவ்வளவு ஏன்... கலைஞர், 'டிவி'யில் ஒளிபரப்பாகும், ராமானுஜர்தொடருக்கான வசனங்களை நான் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்' என்றிருப்பார்.

இது தெரியாத சேகர்பாபு,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குற்றஞ்சாட்டுகிறார்.

அறநிலையத்துறை அமைச்சர், அடுத்த கோயபல்ஸ் ஆக வேண்டாம்!

  






      Dinamalar
      Follow us