PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

கே.சக்கரபாணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் எதற்கு' என்று கேட்டவர்களின் வழியில் வந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி, கடந்த ஆட்சியில், துணை முதல்வராக இருக்கும் ஆணவத்தில், கவர்னரை, 'போஸ்ட்மேன்' என்று இகழ்ந்தார். சட்டசபையில், தேசியகீதம் பாடச் சொன்ன கவர்னரை, 'வெளியே போ' என்று, தி.மு.க., அமைச்சர் பொன்முடி சைகை செய்த போது, அதை கண்டு ரசித்தவர் உதயநிதி; மகிழ்ந்து சிரித்தவர், அப்போதைய முதல்வர் ஸ்டாலின்.
ஐந்தாண்டுகள் ஆட்சியில், ஊழல் செய்து ஆட்டையப் போட்ட நேரம் போக, கவர்னரை வம்புக்கிழுத்து, அரசியல் செய்தே காலத்தை கழித்தவர் தான், உதயநிதி.
இன்று, அவற்றை எல்லாம் மறந்து, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அம்மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், 'நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கவர்னர் முன் நிற்கிறார், உதயநிதி.
இப்போது, கவர்னர் போஸ்ட்மேனாக தெரியவில்லையா?
பதவி வரும் போது பணிவு வர வேண்டும்; ஆட்சி நிரந்தரம் என்று ஆணவத்தில் ஆடினால், மக்கள் மூலையில் உட்கார வைத்து விடுவர் என்பதை, உதயநிதி மட்டுமல்ல; இன்றைய ஆட்சியாளர்களும் மனதில் கொள்ள வேண்டும்!
lll
