PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM
என்.கந்தசாமி, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தங்களுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடும், எதிர்த்து செயல்படும் பெண்களை குறிவைத்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக பதிவிட்டு வருகின்றனர். பெண்களை மதிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் கூறிக் கொள்ளும், த.வெ.க., அரசின் லட்சணம் இதுதானா?’ என கேட்டுள்ளார், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி.
பெண்களை மதிப்பது குறித்து, தி.மு.க., பாடம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
கழக கண்மணிகள், பெண்கள் குறித்து மரியாதையாக பேசிய மேடை பேச்சுகளை எல்லாம், கனிமொழி மறந்து விட்டார் போலும்!
அதிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., அரங்கநாயகியின் கேள்விக்கு, அப்போதைய தமிழக முதல்வரும், கனிமொழியின் தந்தையுமான கருணாநிதி அளித்த பதில், தமிழக வரலாற்றில் பொன்னெழுத்தில் பதியப்பட்ட வாசகங்கள் அல்லவா?
கடந்த 1989 மார்ச் 25 அன்று, சட்டசபையில், பெண் என்றும் பாராமல், ஜெயலலிதாவின் கூந்தலை பிடித்தும், புடவையை பிடித்து இழுத்தும் அவமரியாதை செய்ததை மறந்து, கண்ணியம் குறித்து, த.வெ.க.,விற்கு பாடம் நடத்துகிறார், கனிமொழி.
ஜெயலலிதாவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, 2009 தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி தன் அறிக்கைகளிலும், பேச்சுகளிலும் ஜெயலலிதாவை, ‘திருமதி’ என்றே குறிப்பிட்டு வந்தார்.
இந்த லட்சணத்தில் தான், தி.மு.க.,வினர் பெண்களை மதிப்பதும், பாதுகாப்பதும் எனும் போது, அடுத்தவர்களுக்கு கனிமொழி பாடம் நடத்தலாமா?
lll
