PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM

என்.வேணுகோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் தமிழ் அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள திருக்குறள் புத்தகத்தில், திருவள்ளுவர் காவி உடையும், கழுத்தில் ருத்ராட் ச மாலையும், நெற்றியில் திருநீறும் அணிந்தே காட்சி அளிக்கிறார்.
தமிழகத்திலும், தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், திருவள்ளுவர் இப்படித்தான் காட்சியளித்தார்; அவர் உடை குறித்து சர்ச்சை எழுந்ததில்லை.
கழகம் எப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்ததோ, அன்று தொடங்கியது, இந்த வேண்டாத வேலை!
அதிலும், திருவள்ளுவரை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று நிரூபிக்க முயன்று தோற்றது தனிக்கதை.
அதன் ஒரு கட்டமாகத்தான், திருவள்ளுவரின் நெற்றியில் இருந்த திருநீறையும், கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தையும், அணிந்திருந்த காவி உடையையும் அகற்றி, அவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து குதுாகலித்தனர்.
அதேநேரம், சத்திய ஞான சபையை தோற்றுவித்து, வடலுாரில் அணையா அடுப்பின் வாயிலாக பசிப்பிணி தீர்த்துக் கொண்டிருக்கும் ஜோதி ஸ்வரூபியான ராமலிங்க அடிகளின் உடையே வெள்ளை நிறம் தான் என்பதை வசதியாக மறந்து விட்டனர்.
சரி... தி.மு.க.,வின் ஆட்சியில் தான் இந்த அவலங்கள் அரங்கேறியது என்றால், தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலும், அது தொடர்கதையாக இருக்கிறது.
த.வெ.க., சார்பில், சென்னை நீலாங்கரை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மீன்வலை பின்னும் கூடத்தில், நெற்றியில் திருநீறுடன் வரையப்பட்டிருந்த திருவள்ளுவரின் ஓவியத்தில், திருநீறு, ருத்ராட்சத்தை அழித்துள்ளனர்.
முதல்வர் விஜய் கிறிஸ்துவர் என்றாலும், அவர் இதுவரை ஹிந்து மதத்திற்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியிட்டதாக தெரியவில்லை; மாறாக, அவரே ஹிந்து மத நம்பிக்கையின்படி தான் நெற்றில் பொட்டு, கைகளில் கயிறு என்று இருக்கிறார்.
ஆனால், அவரது அடிப்பொடிகளோ, திருநீறணிந்திருந்த வள்ளுவரின் உருவத்தில், திருநீறை அழித்துள்ளனர்.
‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி’ என்கிறார், வள்ளுவர்.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களாலும் ஏற்படும் ஆசைகளை அடக்கி வென்றவனுடைய வலிமைக்கு, அகன்ற வானுலகத்தார்க்கு தலைவனாகிய இந்திரனே சான்றாவான் என்று, இக்குறளுக்கு பொருள் கூறுகிறார், தமிழ் பண்டிதர் மு.வரதராசன்.
இக் குறளில் வரும் இந்திரன் என்ற வார்த்தை, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வத்தின் பெயரே தவிர, அது கிறிஸ்துவ, இஸ்லாமிய தெய்வங்களின் பெயர் அல்ல!
மேலும், திருக்குறளில் பல இடங்களில், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, திருமால், வாயு, அக்னி பகவான் என்ற ஹிந்து தெய்வங்களின் பெயர் தான் இடம் பெற்றுள்ளதே தவிர, ஐரோப்பிய, அரேபிய கடவுள்களின் பெயர்களோ, அவர்களது கலாசாரம் குறித்த குறிப்புகளோ மருந்துக்கும் இல்லை.
உண்மை இவ்வாறிருக்க, திருவள்ளு வரின் திருநீறை ஏன் அழிக்க வேண்டும்!
நடக்கும் விஷங்களை பார்த்தால், கழகங்களின் ஆட்சி காலத்தை காட்டிலும், த.வெ.க., ஆட்சியில், ஹிந்துக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போலுள்ளது!
lll
