தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 7

இது உங்கள் இடம்: நவ. 7

இது உங்கள் இடம்: நவ. 7

1


PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இறந்தவர்களை உயிர்ப்பியுங்கள்!



எஸ்.சுப்பிரமணியின், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘சந்திக்க நேரம் கேட்டு பல நாட்கள் காத்திருந்தும், ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளிக்கவில்லை’ என்று புலம்பி யுள்ளார், தி.மு.க., – எம்.பி., பாலு.

தி.மு.க., தலைமையின் வலியுறுத்தலின்படி, ஜனாதிபதியை சந்தித்தே ஆக வேண்டும் என்று அக்கட்சி, எம்.பி.,க்கள் காத்திருப்பது, தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக அல்ல; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறைப்படுத்த, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல... இனிவரும் தேர்தல்களை ஓட்டுச்சீட்டு வாயிலாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனராம்!

‘உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில், 28 சட்ட மேல்சபைக்கான தேர்தல், சமீபத்தில் ஓட்டுச்சீட்டு முறையில் தான் நடந்தது; இதில், காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது?’ என கேட்டுள்ளார், பிரதமர் மோடி.

இத்தனைக்கும் கர்நாடகாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, காங்., ஆட்சி தான்!

சட்ட மேல்சபைக்கான தேர்தலில், ஓர் ஆளுங்கட்சி மண்ணைக் கவ்வியது என்றால், அது, காங்., கட்சி தான்!

தி.மு.க., கோரிக்கை வைக்கும் ஓட்டு சீட்டு முறை தேர்தலுக்கான விடையை, கர்நாடக மேல்சபை தேர்தல் எடுத்துக்காட்டி விட்டது.

அதேபோன்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்!

இந்த திருத்தத்தில், இறந்து போனவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஓட்டு உரிமை வைத்திருப்போர், அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி, ஓட்டுரிமை பெற்றுள்ளவர்கள் பெயர்களையே தேர்தல் ஆணையம் நீக்கிஉள்ளது.

அப்படி நீக்கிய பெயர்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலைத் தான் தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறது தி.மு.க.,

தி.மு.க.,வின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாயின், முதலில், இறந்து போனவர்களை உயர்த்தெழ வைத்து தேர்தல் ஆணையத்தின் முன், தி.மு.க., நிறுத்த வேண்டும்.

பின், ஜனாதிபதி முர்மு இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து விடுவாரே... தி.மு.க.,வினரால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா?

lll

சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணமா?



அ.அப்பர்சுந்தரம், மயிலாடு துறையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக வரும் செய்திகளுக்கு, புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சியாக அமைந்து விட்டது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட, முதல்வர் விஜய் வருவதற்கு, அரசு சார்பில் ஆறு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

அதேபோல், கோவையில், ஈ.வெ.ரா., நுாலகம் திருப்பு விழாவில் பங்கேற்க வந்த போதும், பல கோடி ரூபாய் பாதுகாப்பிற்காக செலவிடப்பட்டது.

தற் போது, புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்பதை முன்னிட்டு, ஆயுதப்படை மைதானத்தில் பிரமாண்டமான முறையில், பல லட்சம் ரூபாய் செலவில் குளிர்சாதன வசதியுடன் மேடை, பந்தல், அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென்று, கலெக்டர் அலுவலகத்திற்கு விழா மாற்றப்பட்டதால், விழாவிற்காக செய்யப்பட்ட அத்தனை ஏற் பாடுகளும் வீண் ஆயின.

‘அரசு பணத்தில் ஒரு ரூபாயைக் கூட தொடமாட்டேன்’ என்று வாக்குறுதி கொடுத்துள்ள முதல்வர், இப்படி தான் பங்கேற்றும் நிகழ்ச்சிக்காக பல கோடி ரூபாயை விரயமாக்குவது எந்தக் கணக்கில் வரும்?

‘சுண்டைக்காய் கால் பணம்; சுமைக் கூலி முக்கால் பணம்’ என்பது போல், வெறும் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக, மக்களின் வரிப்பணம் பல கோடிகளை விரயம் செய்யலாமா?

லஞ்சம் – ஊழல் மட்டும் குற்றமல்ல; மக்கள் வரிப் பணத்தை வீண் விரயம் செய் வதும் குற்றம் தான்!

முதல்வர் விஜய் இனியேனும் வீண் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us