PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: நம்நாடு குறித்து உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2011- – 12ல் இந்தியாவில் கிட்டத்தட்ட, 57.௭ சதவீதம் பேர் வறுமையில் இருந்தனர். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், 2022 –23ல் அது, 16.௧ சதவீதமாக குறைந்துள்ளது.
‘கடந்த 2011- – 12ல் நாட்டில் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டோர், 27.2 சதவீதமாக இருக்க, 2024 – -25ல் அது, 2.6 சதவீதமாக குறைந்துள்ளது’ என்று கூறியுள்ளது.
மேலும், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட, 50 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து, மோடி அரசு வாயால் வடை சுடாமல்; சாதித்துக் காட்டியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மோடி பிரதமர் ஆனதிலிருந்தே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள், பிரதமரை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றன; இங்கே தமிழகத்தில் கூட, பா.ஜ.,வை காலுான்ற விடமாட்டோம் என, அனைத்து கட்சிகளும் கங்கணம் கட்டுகின்றன.
ஆனால், மத்திய பா.ஜ., அரசோ, 12 ஆண்டுகளுக்குள், 50 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது.
இந்த, 50 கோடி பேர்களில் தமிழக மக்களும் உண்டு; கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களும் கூட உண்டு என்பதை மக்கள் உணர வேண்டும்.
வறுமை, வேலைவாய்ப்பின்மை இவ்விரண்டும் தான் நாட்டு மக்களை பெரிதும் பாதிக்கும் பிரச்னைகள்; பிரதமர் மோடி இப்பிரச்னைகளை அருமையாக கையாண்டு, நாட்டை வறுமையிலிருந்து மீட்டிருக்கிறார்.
பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழில், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றில் இன்று நம் நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றால், பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனுக்கு கிடைத்த வெற்றி!
பா.ஜ., அரசின் இந்த வெற்றி பயணம், மேலும் தொடர வேண்டும்.
நாடு வலிமை பெற்று விளங்கினால்தானே, நாமும், நம் குடும்பமும் வளமாக வாழ முடியும்!
lll
