தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இன்னும் எத்தனை கதைகளை கூறுவார் நிர்மல்குமார்?

இன்னும் எத்தனை கதைகளை கூறுவார் நிர்மல்குமார்?

இன்னும் எத்தனை கதைகளை கூறுவார் நிர்மல்குமார்?


PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

பொதுவாக, கோடைக் காலத்தில் தான் மின் உபயோகம் அதிகளவில் இருக்கும்; மின்வெட்டு ஏற்படும்.

ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலோ, கோடைக்கு முன்பாகவே, மின்வெட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை சரி செய்ய மின்சாரத்தை கொள்முதல் செய்வதாக, ‘டெண்டர்’ விடுவதும், பின், ரத்து செய்வதும் என தொடர்கிறது.

முதலில், மின்வெட்டுக்கு காரணம், கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்ததில் ஊழல் என்றார், மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார். பின், அதை மறைக்க, ‘ஹார்டு டிஸ்கு’கள் திருட்டு என்றார். அடுத்து, ‘பியூஸ் கேரியரை விஷமிகள் எடுத்துச் செல்வதால் மின்தடை ஏற்படுகிறது; விரைவில் கண்டுபிடிப்போம். மின் விநியாகமும் சீராகும்’ என்றார்.

ஆனால், இன்று வரை மின்வெட்டு தொடர்கிறது. இப்போது, வி.ஐ.பி.,க்கள் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளில், மின்வாரியத் துறையில் உள்ள சிலர் வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்துகின்றனர் என்று, ஒரு புது கதையை கூறுகிறார் அமைச்சர்.

தன் துறையில் விஷமிகள் இருப்பதாக கூறும் அமைச்சருக்கு, அந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து களையெடுக்க ஆண்டுகள் பல வேண்டுமோ!

‘ஆடத் தெரியாதவள், மேடை கோணல் என்று சொன்னாளாம்’ என்பது போல், தன் துறை சார்ந்த தவறுகளை களைய முடியாத அமைச்சர், மின்வெட்டுக்கு ஒவ்வொரு முறையும், புதுப் புது கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார்.

மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான், மக்கள் இரண்டு திராவிட கட்சிகளையும் துாக்கியெறிந்து, த.வெ.க.,வை ஆட்சிப் பீடத்தில் அமர வைத்துள்ளனர். மின்சார துறை அமைச்சர் தன் திறமையற்ற நிர்வாகத்தால், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us