PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!
எஸ்.எ.ஸ்ரீனிவாச சர்மா, கோவையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவு, அந்நாட்டு மக்களின் உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாடு என்று கூறினால், மிகையில்லை.
‘நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை வெளியேற்றுவேன்’ என்று கூறி, தன் ஆட்சியை துவக்கினார், அதிபர் டிரம்ப். எந்த நாடும் அகதி களுக்காக எல்லையை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க முடியாது என்பதால், டிரம்பின் செயலை அமெரிக்கர்கள் வரவேற்கவே செய்தனர்.
அதே நேரம், ஈரான் மீது வலிந்து போரை துவக்கியது; தன் பேச்சுக்கு கட்டுப்பட மறுக்கும் நாடுகள் மீது வரி விதிப்பது; நேரத்திற்கு ஒரு பேச்சு பேசுவது போன்றவை டிரம்பின் மீதான பிம்பத் தை சரித்து விட்டது.
நம் நாட்டில் எப்படி வெங்காயம், உருளைக் கிழங்கின் விலைகள் அரசியல் முடிவுகளை நிர்ணயம் செய்கிறதோ, அதேபோல் அமெரிக்காவில் ‘கசோலைன்’ என்ற பெட்ரோல் விலை உயர்வு, இடைக்காலத் தேர்தலை நிர்ணயம் செய்துள்ளது.
தேர்தல் முடிவுகள் நம் நாட்டிற்கு சாதகமாக இருக்குமா என்று கேட்டால், இந்த இடைக்காலத் தேர்தல் அவர்களது உள்நாட்டு பிரச்னை; நம்மைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் மொத்தமே உள்ள குடியரசு மற்றும் ஜனநாயக் கட்சிகளான இரண்டுமே, கல்லில் திருப்பித் திருப்பி போடப்படும் ஒரே தோசை தான்!
ஜனநாயகம், மனித உரிமை, மதச் சுதந்திரம் என்று கூறிக் கொண்டு, மற்ற நாட்டு பிரச்னைகளில் மூக்கை நுழைத்து, அரசியல் செய்யும் விளையாட்டை அமெரிக்கா நிறுத்தப் போவதில்லை. அதுவும் இந்தியா என்றால், தாராளமாகவே மூக்கை நுழைக்கும்.
நாம் தான், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!
lll
காலி பணியிடங்களை நிரப்புங்கள்!
முனைவர் செ.அ.ராகுல் கோல் டன், உதவி பேராசிரி யர், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
அரசு பணி என்பது, ப டித்த இளைஞர்கள் அனைவருக்குமே இருக்கும் ஓர் ஒளிமயமான கனவு!
நிலையான வருமானம், பணிப் பாதுகாப்பு, சமூக மரியாதை, குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கை ஆகியவற்றை அரசு பணி வழங்குவதால், லட்சக் கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வு களுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம், வயது உச்சவரம்பு என்பது, பலருக்கும் மி கப்பெரிய தடையாக இருந்தது.
இச்சூழலில், அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பை, ஐந்து ஆண்டு கள் உயர்த்தி அறிவித்துள்ளது, தமிழக அரசு. இந்த ஏற்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறை யில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வயது தளர்வு, போட்டி தேர்வுக்கான வயதை பொருளாதாரச் சிரமங்களால் கடந்தவர்கள், குடும்பப் பொறுப்புகளை ஏற்று, வேலை பார்த்தபடி தேர்வுக்குத் தயாராகுவோர், கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இருப்பினும், வயது தளர்வு மட்டுமே வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வாகி விடாது.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முறையாகக் கணக்கிட்டு, அவற்றை தேவைக்கேற்ப நிரப்புவது அவசியம்.
பல ஆண்டுகளாக தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படாமல் இருப்பதும், தேர்வு நடத்தப்பட்ட பின், முடிவு களை அறிவிக்க தாமதப்படுத்துவதும் இளைஞர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல; அவர்களது நம்பிக்கையையும் சிதைக்கிறது.
எனவே, அரசு ஒவ்வொரு துறையிலும் காலிப்பணியிட விபரங்களை வெளியிட்டு, தேர்வு மற்றும் நியமனத்திற்கான கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்!
lll
