sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தேய்ந்து வரும் 'இண்டியா' கூட்டணி!

/

தேய்ந்து வரும் 'இண்டியா' கூட்டணி!

தேய்ந்து வரும் 'இண்டியா' கூட்டணி!

தேய்ந்து வரும் 'இண்டியா' கூட்டணி!

3


PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த பார்லிமென்ட் தேர்தலில், படுதோல்வி அடைந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது, சட்டசபை தேர்தலிலும் தோல்வி அடைந்து, பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்து விட்டது.

இதற்கு காரணம், பா.ஜ.,வை எந்த அளவுக்கு வசைபாட முடியுமோ, அந்த அளவுக்கு திட்டித் தீர்த்தார் ஊழல் மன்னன் அரவிந்த் கெஜ்ரிவால்!

விளைவு... பல இடங்களில் ஆம் ஆத்மி மண்ணைக் கவ்வியது. அதேநேரம், அக்கட்சியை சேர்ந்தவரும், தற்காலிக முதல்வராக பதவி வகித்த ஆதிஷி, அதிர்ஷ்டவசமாக வெற்றி பெறவே, தன் சந்தோஷத்தை ஆடிப்பாடி களித்து விட்டார்.

கட்சியின் தலைமை தோற்றுப் போனது கூட அம்மணிக்கு நினைவில் இல்லை; அந்த அளவு தன் வெற்றியை கொண்டாடி தீர்த்து விட்டார்.

அதேநேரம், 27 ஆண்டுகளுக்கு பின், டில்லியில் ஆட்சியைப் பிடித்து, மகத்தான சாதனை படைத்துவிட்டது, பா.ஜ.,!

தனித்துப் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது, காங்கிரஸ் கட்சி.

இப்போது, மே.வங்கத்தில் காங்., கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டேன் என்று, நெத்தியடியாகச் சொல்லி விட்டார் மம்தா பானர்ஜி.

சுயநலத்தால் உருவான, 'இண்டியா' கூட்டணி, அதே சுயநலத்தால் தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து வருகிறது.

அன்று, ஜெயப்பிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சி காணாமல் போனது போல், இன்று இண்டியா கூட்டணி!

பிரதமர் நேரு மற்றும் இந்திரா காலத்தில் செல்வாக்கோடு இருந்த காங்., கட்சி, இன்று மாநில கட்சிகளின் தயவில் வாழும் பரிதாப நிலையில் உள்ளது.

மக்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பதை, ஊழலில் திளைக்கும் மாநிலக் கட்சிகள், காங்., கட்சியின் இன்றைய நிலையை பார்த்து, பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

தமிழகத்தின் சாபக்கேடு!


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தான், நவீன தமிழகத்தை உருவாக்கியதாக அவரது நினைவு நாளன்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டிப் பேசியதைக் கேட்டபோது சிரிப்புதான் வந்தது.

தமிழகத்தை கருணாநிதி எப்படி நவீனமயமாக்கினார் என்பதற்கு இதோ ஒரே ஓர் உதாரணம்...

கடந்த 1967ல் கழகம் அரியணை ஏறியபோது, தமிழகத்தில் இருந்த மொத்த ஏரிகள், 42,000; தற்போது இருப்பதோ வெறும், 7,000 மட்டுமே!

மீதமுள்ள, 35,000 ஏரிகள் கருணாநிதி ஆட்சிக் காலங்களில் காணாமல் போயின.

அத்துடன், இரண்டு லட்சமாக இருந்த குளங்கள், ஒரு லட்சமாகக் குறைந்தன!

இதுபோன்று, கருணாநிதி நவீன தமிழகத்தை உருவாக்க ஆற்றிய பணிகள் ஏராளம்;அதை பட்டியல் போட்டால்,இப்பகுதியில் இடமிருக்காது.

அதேசமயம், பிரதமர் மோடி குஜராத் மாநிலமுதல்வராக இருந்தபோது, நவீன குஜராத்தை எப்படி உருவாக்கினார் என்பதற்கு ஒரே ஓர் உதாரணம்...

கடந்த 2004ல் முதன் முதலில் குஜராத் மாநில முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, சென்னை கூவம் ஆறு போல், கழிவுநீர் கலந்து ஓடிக்கொண்டிருந்த சபர்மதி ஆற்றை சுத்தப்படுத்தி, எட்டு ஆண்டுகளில் அதாவது, 2012ல் படகு சவாரி செய்யுமளவுக்கு துாய்மைபடுத்தினார்.

சபர்மதி நதிக்கரையோரம் குடிசை போட்டு வசித்த மக்களுக்கு, நவீன அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து இடமாற்றம் செய்தவர், அந்த இடங்களில், பூங்காக்களை அமைத்து, நதிக்கரையை அழகுபடுத்தினார்.

அதன்பின், 2014ல் நாட்டின் பிரதமரான பின், இந்தியாவிற்கு விஜயம் செய்த சீன அதிபருடன், இதே பூங்காவிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, இரு நாட்டு உறவு குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால், ஐந்து முறை முதல்வராக இருந்தும், கூவம் ஆற்றை சுத்தப்படுத்த சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை, கருணாநிதி.

இவர் நவீன தமிழகத்தை உருவாக்கியவராம்!

இதே மோடி தமிழக முதல்வராக இருந்திருந்தால், சபர்மதியைப் போல், கூவமும் இன்று பொலிவு பெற்றிருக்கும்.

என்ன செய்வது... தமிழர்களின் சாபக்கேடு... குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல், இரு திராவிடக் கட்சிகளின் கைகளில் சிக்கி, தமிழகம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது!

பகல் கனவு!


வா.தியாகராஜன், வாயலுார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2011ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது; அதை நடைமுறைபடுத்தியது பழனிசாமி என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு விழா நடத்தியதும் தவறில்லை.

ஆனால், அழைப்பிதழ் மற்றும் பேனர்களில் இத்திட்டத்திற்கு வித்திட்ட ஜெயலலிதா மற்றும் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர்., படம் இடம்பெறாமல், பழனிசாமி படம் மட்டும் காட்சிபடுத்தப்பட்டிருப்பதை, அக்கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்திருப்பது மிக சரியே!

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா காலம் முடிந்து விட்டது; இனி, அ.தி.மு.க., தன் கட்டுப்பாட்டில், தன் கண் அசைவில், தன் ஒற்றை தலைமையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார், பழனிசாமி.

அத்துடன், வருங்காலத்தில் அ.தி.மு.க.,வின் ஒற்றைமுகமாக, தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தையே இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுக்கின்றன.

பழனிசாமி ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும்...

இன்றும், பட்டிதொட்டி எல்லாம் இரட்டை இலை உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அதற்கு காரணம், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா எனும் ஆளுமைகள் மட்டுமே!

தன்னை புரட்சி தமிழர் என்று அழைத்துக் கொள்வதாலேயே, பழனிசாமி அவர்களுக்கு இணையான ஆளுமையாக முடியாது.

இதற்கு கடந்த தேர்தல்களே சான்று!

ஏற்கனவே, அ.தி.மு.க., மூன்றாக பிளவுபட்டு, கட்சியின் ஓட்டுகள் நாலாபுறமும் சிதறிக் கிடக்கின்றன... வலுவான கூட்டணியும் இல்லை.

இந்நிலையில், கட்சி நிறுவனர் மற்றும் கட்சியை கட்டிக் காப்பாற்றிய முன்னோடிகளை புறந்தள்ளி, தான் மட்டுமே கட்சி என்பது போல் பழனிசாமி நினைத்துக் கொண்டிருந்தால், வரும் காலத்தில் அ.தி.மு.க., எனும் ஆலமரம் அடியோடு வீழ்ந்து காணாமல் போய்விடும்.

அதன்பின் அவரது முதல்வர் கனவு எப்போதுமே நிறைவேறாத பகற்கனவாகவே போய் விடும் என்பதை மறந்து விட வேண்டாம்!








      Dinamalar
      Follow us