தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ஊழலில் யாருக்கு பங்குண்டு என்பது வெட்டவெளிச்சம்!

ஊழலில் யாருக்கு பங்குண்டு என்பது வெட்டவெளிச்சம்!

ஊழலில் யாருக்கு பங்குண்டு என்பது வெட்டவெளிச்சம்!


PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: காலம் காலமாக நுாலகத்திற்கென, தரமற்ற, மலிவான புத்தகங்கள் தயாரிக்கப்படுவதையும், நுாலகத் துறை, அத்தகைய பதிப்பகங்களுக்கே, ‘கமிஷன்’ அடிப்படையில், ‘ஆர்டர்’ வழங்குவதையும், நுாலக அடுக்குகளில் காணப்படும் புத்தகங்கள் மூலம் அறியலாம்; பதிப்பகத்தாரிடமும் விசாரித்து உணரலாம்.

ஆயிரத்தில் தொடங்கிய இந்த ஊழல் லட்சங்களைத் தொட்டு இன்று கோடிக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில், நுாலக வரி வசூலிக்கப்படுகிறது. அதை யும் நுாலக வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், வேறு துறைக்கு மாற்றுவதாகச் சொல்லப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட, ஆறு மாவட்ட நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக, ‘பபாசி’ எனப்படும் பதிப்பாளர்கள் சங்கம், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு எழுத்தாளர், அரசு ஊழலை வெளிக்கொண்டு வந்தது ஆச்சரியமான துணிச்சல் என்றே சொல்லலாம்.

ஈ.வெ.ரா., நுாலகம் உள்ளிட்ட புதிய நுாலகங்களுக்கான நுால் பரிந்துரை குழுவில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன், அந்த நுாலகம் திறக்கப்பட்ட பிறகு அதை பார்வையிட்டு, ஊழலை கண்டுபிடித்திருக்கிறார்; அரசும் உடனடியாக விசாரணையை தொடங்கியிருக்கிறது.

தரமற்ற தவறான தகவல்களைக் கொண்ட நுால்களை, போட்டித் தேர்வு களுக்காக பயன்படுத்தும் மாணவர்களின் எதிர்காலமே இதனால் பாதிக்கப்படுமே! இந்த அறிவு மோசடியை செய்த தமிழ் துரோகிகளை, உடனடியாக தண்டிப்பதோடு, அந்த அபத்த நுால்களையும் அழித்து விட வேண்டும்.

புத்தகம் என்பது, காலம் கடந்தும் வாழும் ஆவணம். அதில் நடக்கும் ஊழல் என்பது, அறத்தை வேரறுப்பது போன்றது.

‘அறிவை ஆரோக்கியமாக்கும் மூளையின் ஆகாரமான புத்தகங்களில் விஷக் கிருமிகளா? நுாலக ஊழலை கண்டுபிடிப்பது, வரும் தலைமுறைக்கு நாம் கற்றுத்தரும் நேர்மைக்கான பாடம்’ என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுள்ளார், எந்த பிரச்னைக்கும் இதுவரை வாய் திறக்காத, எழுத்தாளர் ராஜேஷ்குமார்.

அதனால் தான், ‘தினமலர்’ நாளிதழும், வாசகர்களுடன் இணைந்து, நுால க ஊழலை வெளிக்கொணர, போர்க்கால நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது.

ஒரு நுாலகத்திற்கு, ஏழு ஏக்கர், ஏழு தளம் என்று பிரமாண்ட கட்டடங்களோ, ‘பெரியார்’ என்ற ஈ.வெ.ரா., அவசியமல்ல; அறிவு வளர்க்கும் தரமான நுால்கள் தான் முக்கியம். அதிலும் ஊழல் செய்வது, சிந்திக்க தொடங்கும் மக்களை கெடுக்கும் மாபாதகம்!

எல்லா அரசு துறைகளிலும் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் – ஊழல் என்ற தொற்று வியாதியை பரப்பி வளர்த்ததில், அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பங்குண்டு என்பது வெட்ட வெளிச்சம். அவர்களையும் தண்டிப்பதோடு, லஞ்சம் – ஊழலுக்கு உடனடியாக நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது காலத்தின் கட்டாயம்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us