PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:------------ நாட்டு மக்கள் தொகைக்கேற்ப, லோக்சபா தொகுதிகளை சீரமைக்க, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பிரதமராக இந்திரா இருந்தபோது, 1970ல் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை தீவிரமாக செயல்படுத்த முனைந்தார்;1971ல் 'மிசா' என்ற உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு எமர்ஜென்சி.
இந்த மூன்று திட்டங்களாலும், 1977ல் ஆட்சி இழந்தது காங்கிரஸ்.
குடும்பக் கட்டுப்பாட்டு முறையின்போது, பாமர ஏழை மக்களை, அரசு அதிகாரிகள் தேடி விரட்டிச் சென்று பரிசு தொகை கொடுத்து, கருத்தடை ஆபரேஷன் செய்தனர். ஆனால் சமீபத்தில் தமிழக அரசு, இலவச செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையை திறந்துள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார். அவரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினும், 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என வாழ்த்துகிறார்.
தென் மாநிலத்தவர்கள், குடும்ப கட்டுப்பாட்டை, இயல்பாக பின்பற்றி வருகின்றனர்.
கூட்டுக் குடும்ப முறை உடைந்ததால், தனிக்குடித்தனம் பெருகியது. இளம் தம்பதியினரின் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள் இல்லை. பிள்ளை பெற்றுக்கொள்ள தம்பதியருக்கு ஆர்வம் குறைந்தது, பயம் வந்தது. பிள்ளைகளுக்கு, அத்தை, மாமா, சித்தி,பெரியம்மா, அண்ணன், தம்பி உறவுமுறை மறந்தது.
எல்லாவற்றையும் விட மத்திய அரசில் மாநிலத்தின் பங்குக்கு வில்லங்கம் வந்தது.படித்த, நடுத்தர விழிப்புணர்வுமிக்கமாநிலங்களின் பிரதிநிதித்துவம், அதிகாரம் மிக்க மத்திய அரசில் குறையும் அபாயம் உருவாகி வருகிறது.
கடந்த, 2013ல், 7.33 கோடியாக இருந்த தமிழக மக்கள் தொகை, 2024ல், 7.71 கோடியாகவும், 2031ல், 7.8 கோடியாகவும்இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும், 2031க்குப் பிறகு தமிழக மக்கள்தொகை குறைய துவங்குமாம். முதியவர்களின் எண்ணிக்கை மிகுதி ஆகும். 15 முதல் 49 வயதுள்ள தமிழ் பெண்களின் மகப்பேறு திறன், 1.4 தான்.
இந்தியாவிலேயே மகப்பேறு திறன் குறைவாக உள்ள மாநிலம் செந்தமிழ் நாடே. ஐ.டி., துறையில் ஏராளமாக சம்பாதிக்கும் இளைஞர் - இளைஞியருக்கு, புத்திர பாக்கியம் அரிதாக உள்ளது. காரணங்கள், அவர்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம்.
மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி., சீட்கள்நிர்ணயித்தால், உ.பி., பீஹார் மாநிலத்தவர் தான், அரசியல் அதிகாரம் பெறுவர்.
நல்லவேளை... முதல்வர் ஸ்டாலின் விழித்துக் கொண்டார். தமிழகத்துக்கு, 40 எம்.பி.,க்கள் கண்டிப்பாக வேண்டும் என உரிமைக்குரல் எழுப்ப, அனைத்து கட்சி பேரணியை, டில்லி பார்லி., முன் முதல்வர் நடத்த வேண்டும்.
விளையாட்டுத்துறை அமைச்சர் கவனத்திற்கு!
தமிழக
குத்துச்சண்டை வீரர்கள் சென்னையில் இருந்து எழுதிய கடிதம்: சமீபத்தில்,
முதல்வர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி, சென்னையில் நடந்தது.14.09.2024
முதல் 18.09.2024 வரை நடந்த, மண்டலப் போட்டியில், ஆர்.லெனின் என்பவர்,
தங்கம் வென்றார்.
அடுத்து, மாநில அளவிலான போட்டி, 14.10.2024ல்
நடந்தது.இப்போட்டியில், லெனினுடன் சண்டையிட்டவரைப் பார்த்து அதிர்ச்சி
அடைந்தோம். ஏனெனில், மண்டல போட்டியில், லெனினிடம்தோற்ற செல்வன் தஸ்தகீர்
ெஷரிப் என்பவர் மீண்டும் அவரை எதிர்த்து களம் கண்டார். அவரே வெற்றி
பெற்றவராகவும் அறிவிக்கப்பட்டார்.
'ஒரு வீரர் ஒரு போட்டியில், 'நாக்
அவுட்' முறையில் தோற்றால், மீண்டும் அந்த வீரர், 30 நாட்களுக்கு, எந்த வித
போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்படக் கூடாது' என்பது, சர்வதேச
குத்துச்சண்டை அசோசியேஷன் விதி.
மேற்படி போட்டியில் வென்றதாக
அறிவிக்கப்பட்ட தஸ்தகீர், மண்டல போட்டியில் லெனினிடம்,'நாக் அவுட்'
முறையில் தோற்றவர். என்ன நடக்கிறது இங்கே என்பது குறித்து, விளையாட்டுத்
துறை அமைச்சர் விளக்கம் அளிப் பார் என எதிர்பார்க்கிறோம்.
இதுவே சிறந்த வழி!
ஏ.அஸ்மாபாக்
அன்வர்தீன்,ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான்
எந்த ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினரும் அல்ல. நடிகர் விஜய்க்கு,
ஒருசிலஆலோசனைகளை சொல்ல விரும்புகிறேன்...
தேர்தல் என்பது மக்கள்சேவைக்கான நுழைவாயில்.மக்கள் உங்களை தேர்வு செய்தால், மக்களைப் பற்றி சிந்தியுங்கள்; மற்றதெல்லாம் அப்புறம்
கட்சி விட்டு கட்சி தாவும்பழந்தின்னி பறவைகளை, உங்கள் கட்சியில் சேர்க்காதீர்கள்
ஊழல் அரசியல்வாதிகளை, உங்கள் அருகில் வர விடாதீர்கள்
நினைவுச் சின்னங்கள்,மணிமண்டபங்கள், சிலைகள், பூங்காக்கள், தேவையற்ற இலவசங்கள்,ஆடம்பர விளம்பரங்கள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள்
மக்களின் மீதான வரிகளை முடிந்த அளவு குறையுங்கள்
மதுவிலக்கை அமல்படுத்த முன்வாருங்கள். அரசுக்கு, வேறு இதர நியாயமான வருவாய் கிடைக்க வழி காணுங்கள்
அரசு ஊழியர்கள், ஊழல், லஞ்சமின்றிமக்களுக்கு பணியாற்ற ஆவன செய்யுங்கள்.
வரலாற்றில் நீங்கள் இடம்பெற இதுவே சிறந்த வழி.
மிரட்டுவோரை தண்டிக்க வேண்டும்!
ப.ராஜேந்திரன்,
சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: விமானங்களுக்கும்,
பள்ளிகளுக்கும் சமீப காலத்தில் அதிகமான வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.
தனியார்
பள்ளிகளும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் இந்த மிரட்டல்களால்
பாதிக்கப்படுவதால், நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் பா.ஜ., அரசை குறி
வைத்தே, இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட
மிரட்டல்விடுக்கப்படும் பள்ளிகளில்படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும்
அளவு கடந்த பதற்றத்தை அடைகின்றனர்; சாப்பிடக் கூட மறந்து விடுகின்றனர்.
மேலும்,
விமானங்களைவெடி வைத்து தகர்க்கப் போவதாக, 'எக்ஸ்' தளத்தில் மிரட்டல்கள்
விடுக்கப்படுகின்றன. மிரட்டல் விடுப்பவர்கள் குறித்து அறிய முடியாமல்
இருப்பதால், மத்திய அரசும், 'விபரம் அறியாமல் செய்திகளை வெளியிடக் கூடாது'
என, 'எக்ஸ்' தள பொறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய தகவல்
தொழில் நுட்ப அமைச்சகமும், 'எக்ஸ்' தளத்தை கடுமையாக சாடியுள்ளது.
கடந்த எட்டு நாட்களில், 170க்கும் மேற்பட்டவிமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல்கள் வந்துள்ளன.
கடுமையான
தண்டனைகள் மட்டுமே, இப்படி போலித் தகவல்களை கொடுத்து
அச்சுறுத்துபவர்களுக்கு தேவை. குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் சிறை
தண்டனைகொடுப்பது, வங்கிக் கணக்குகளை முடக்குவது,உறவினர்களை பார்க்க தடை
விதிப்பது ஆகியவை, இது போன்ற குற்றங்கள் குறைய வழி வகுக்கும்.

