/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தமிழகம் 'ஜகஜ்ஜோதியாய்' விளங்குகிறதே!
/
தமிழகம் 'ஜகஜ்ஜோதியாய்' விளங்குகிறதே!
PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM
ஏ.சிரில் சகாயராஜ், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குருஷேத்திர போர்க்களத்தில், துரோணரை வெல்ல வேண்டி, ஆயுளில் பொய்யே சொல்லாத தர்மரை, பொய் சொல்ல வைத்தான் கிருஷ்ணன். அது, நாட்டு மக்களின் நன்மைக்காக.
ஆனால், பொறுப்பான பதவியில் அமர்ந்து கொண்டிருப்பவர், தான் பேசும் இடங்களில் எல்லாம், பொய்யை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், அவரை என்னவென்று அழைப்பது!
'மத்திய அரசின் திட்டங்களில் எதை நாங்கள் தடுத்தோம்? தமிழகத்தில் செயல்படுத்திய சிறப்பு திட்டங்களை, பிரதமர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?' என, பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவை, அரசியல் விழாவாக்கி, முதல்வர் ஸ்டாலின் ஒரு அணுகுண்டை எடுத்து வீசி இருக்கிறார்.
முதல்வரின் இந்த பொய் குற்றச்சாட்டுக்கு, 'தமிழகத்தில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது' என்று புள்ளி விபரத்தோடு பட்டியலிட்டு, ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி.
இங்கு ஒரு உதாரணம் தருகிறேன்...
கடந்த, 1986ல் காங்கிரசின் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, ஆறு முதல் 11 வகுப்பு வரையிலான ஏழை மாணவ - மாணவியர் அனைவரும் இலவசமாக கல்வி பயில வேண்டும் என்ற காரணத்திற்காக, நாடு முழுதும் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டன.
இவர்களுக்கு அனைத்தும் இலவசம்;பள்ளி பாடங்கள் தவிர, ஒவ்வொரு பிள்ளையின் தனித் திறன்களை கண்டறிந்து, அவற்றில் தேர்ச்சி பெறவும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த நவோதயா பள்ளிகளில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வர விடாமல் தடுத்தது, நம் 'கழக' அரசு. காரணம் என்ன சொல்லப்பட்டது தெரியுமா... இங்கெல்லாம் ஹிந்தி கற்றுக் கொடுக்கின்றனர் என்று!
அப்படியெனில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை ஏன் தடுக்கவில்லை? தாங்கள் பிசினஸ் செய்வதற்காக!
நவோதயாவின் அனைத்து கொள்கைகளையும் பின்பற்றி, பள்ளியின் பெயரை மட்டும் மாற்றிப் போட்டு, கொள்ளையடிக்க!
சாமானிய மக்களோ, படித்து தேர்ந்து, வாழ்க்கையில் முன்னேறி விடக் கூடாது.
முன்னேறி விட்டால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆள் கிடைக்க மாட்டார்கள். போஸ்டர் ஒட்டி பாலபிேஷகம் செய்ய ஆள் கிடைக்காது.
கோஷமிட்டு, கும்மாளமிட்டு கொடி பிடிக்க ஆள் கிடைக்க மாட்டார்கள்.
இந்தக் கணக்கெல்லாம் போட்டதால் தான் இன்று தமிழகம், குடியும், போதையுமாய் 'ஜகஜ்ஜோதியாய்' விளங்குகிறது.
ஹிந்தி மட்டுமல்ல ஆங்கிலமும் அவசியம்!
ந.சேதுரத்தினம்,
அனுபுரம்,காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஆ.மோகன் என்பவர்
சிவகங்கையிலிருந்து எழுதியிருந்த கடிதத்தை படித்தேன்.
நம் நாட்டு சட்ட அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட, 22 மொழிகளில் ஒன்று, ஹிந்தி.
இங்கு,
ஹிந்தி பேசுவோர் மட்டுமே அமைச்சராக இருப்பதில்லை. ஹிந்தி பேசாதவர்களும்,
ஹிந்தி தெரிந்து வைத்திருக்கின்றனரே தவிர, வேற்று மொழியினரும்
அமைச்சராகவும் உள்ளனர்.
எல்.கணேசன், நாகாலாந்து கவர்னராக உள்ளார்;
எல்.முருகன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சராக உள்ளார்.
இவர்கள் ஹிந்தியை பயன்படுத்துவோர் அல்லர்; இவர்களுக்கு, ஆங்கிலமே பெரும்
துணையாக உள்ளது.
ஹிந்திக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து தந்து, மற்ற
மொழிகளையும், அம்மாநில மக்களையும், இரண்டாந்தர மக்களாக மாற்றுவது, எந்த வகை
ஜனநாயகம், நேர்மை?
'ஹிந்தி பேசுவோரும், ஆங்கிலம் கற்றுக்
கொள்ளுங்கள்' எனக் கூறியிருந்தால் வாழ்த்தலாம். ஏனெனில், உலகையே ஆண்ட
ஆங்கிலேயன் ஓடி விட்டாலும், இன்று உலகை அவனது மொழி ஆங்கிலம், ஆண்டு
கொண்டிருக்கிறது.
ஹிந்தி பேசுவோரும், ஆங்கிலத்தில் புலமை பெற்று,
அனைத்து மாநில மக்களுடனும், சகஜமாக மொழி வேற்றுமையின்றி வாழ வகை செய்ய,
அறிவுரை கூறுவது நலம்.
தகவல் கேட்டால் கிடைப்பதில்லையே?
கே.ஜான்
வெஸ்லி, கோவையில் இருந்து எழுதுகிறார்: தகவல் அறியும் உரிமை சட்டம்,
2005ல் இயற்றப்பட்டதன் நோக்கம், அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மை
வேண்டும் என்பது தான்.
ஆனால் தற்போது, இந்த உன்னதமான சட்டம் முழுமையாக செயல்பாட்டில் இல்லை.
முப்பது நாட்களில் கொடுக்க வேண்டிய தகவல்களை பல மாதங்கள்கடந்தும் கொடுப்பதில்லை.
வீட்டு
வசதி வாரியமும், கோவை வீட்டு வசதி பிரிவு பொது தகவல் அலுவலரும், இன்னும்
ஒருபடி மேலே சென்று, 'ஏற்கனவே தகவல்கள் கொடுக்கப்பட்டு விட்டன'என, மாநில
தகவல் ஆணையத்திற்கு பொய்யான அறிக்கை அனுப்பி விட்டன.
ஆணையமும், அதை உண்மை என்று நம்பி, எனக்கு கடிதம் எழுதி, ஊர்ஜிதப்படுத்த சொல்கிறது.
நான்
நான்கு விபரங்களை கேட்டு, 2023, அக்., 28ல், கோவை வீட்டு வசதிப்பிரிவு
அலுவலக பொது தகவல் அலுவலருக்கு, பதிவு அஞ்சல் அனுப்பினேன். ஒவ்வொரு
விபரமும், ஒரே வரியில் பதில் கொடுக்க கூடியவை.
முறையீட்டு
அலுவலருக்கு புகார் செய்து, அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, தகவல்
கொடுத்து விட்டதாக பொய்யான பதில், தகவல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கேட்கப்பட்ட விபரங்கள் அலுவல் சார்ந்தவை; தனிப்பட்டவர்களுடைய தகவல்கள்
அல்ல.
பொதுமக்கள் கேட்கும் தகவல்களை உண்மையாகவும், முழுமையாகவும்
உடனுக்குடன் கொடுக்க வேண்டும். இல்லையேல் 25,000 ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாண்புமிகு மாநில தகவல் ஆணையத்திடமிருந்து, தகவலை எதிர்நோக்கியுள்ளேன்.
புத்தாண்டுக்காவது வருமா 'டிடி - தமிழ்?'
பா.காளியப்பன்,
ஆனையூர்,மதுரை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'டிடி - பொதிகை'யின்
புதிய அவதாரமாக, 'டிடி - தமிழ்' சேனலுக்கு ஜன., 19ல் பாரத பிரதமர் மோடி
அடிக்கல் நாட்டினார்.
டிடி தமிழ் சிறப்பம்சங்களாக, 'புத்தம் புதிய
தொலைக்காட்சி தொடர்கள், மணிக்கு மணி செய்திகள், நடப்பு நிகழ்வுகள் குறித்து
சுவையான விவாதங்கள், தினமும் திரைப்படங்கள், மீண்டும் ஒலியும் ஒளியும்'
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியை படித்த உடனே,
பரவசம் அடைந்தேன். ஆனால், நாற்பது நாட்களுக்கு மேலாக, தொலைக்காட்சியை
திருகித் திருகிப் பார்க்கிறேன். கை வலித்தது தான் மிச்சம்; அச்சேனலை
காணவில்லை. இன்னும் ஏன் தாமதம் என்று புரியவில்லை.குறைந்தபட்சம் தமிழ்
வருடப்பிறப்பு அன்றாவது, 'டிடி தமிழ்' எச்.டி., தலைகாட்டி விடும் என்று
நம்புகிறேன்!

