PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

ஆர்.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: மதுரையில், த.வெ.க.,கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது.
பொதுவாக ராகு காலம், குளிகை காலம், எம கண்டம் போன்றவை தான் தினமும் ஒன்றரை மணி நேரம் வரும். த,வெ.க., மாநாடும் ஒன்றரை மணி நேரமே நடந்து, உலக சாதனை புரிந்துள்ளது.
'அரசியல் ஆதாயத்திற்காக, த.வெ.க., துவங்கவில்லை; கொள்கை, கோட்பாட்டுக்காக துவங்கப்பட்டது.
'நமக்கு ஒரே கொள்கை எதிரி பா.ஜ., தான்; ஒரே அரசியல் எதிரி தி.மு.க., தான்' என்று மாநாட்டில் முழங்கியுள்ளார், அக்கட்சி தலைவர் நடிகர் விஜய்.
பொதுவாக, புதிதாக கட்சி துவங்குவோர் நாட்டு முன்னேற்றம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாய உற்பத்தி பெருக்கம், விலைவாசி குறைப்பு, தேசப்பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் என இப்படி ஏதாவது ஒரு, 'கான்செப்ட்'டை வைத்து கட்சி துவங்குவது தான் வழக்கம்.
ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் இரு அரசியல் கட்சி களை எதிர்த்து, ஓர் அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை, உலகமே இப்போது தான் முதன்முதலாக பார்க்கிறது.
பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சியை கையில் வைத்துள்ளார். ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா?
இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்து கொண்டிருப்பவரை தான், உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் நாடுகளும் வரவேற்று, பாராட்டி, கவுரவித்து கொண்டிருக்கின்றனவோ?
தமிழக மக்கள் மனதில் பா.ஜ., எப்படி ஒட்டும் என்று கேள்வி கேட்கும் விஜய், தமிழக மக்கள் மனதில் எந்த கட்சி ஒட்டிக் கொண்டிருக்கிறதோ, அவர்களிடம் கச்சத் தீவை மீட்பது குறித்து கோரிக்கை வைக்கலாம் அல்லவா?
காமராஜர் பள்ளிப்படிப்பு கூட முடிக்காதவர். ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த அவர் எந்த கூட்டத்திலும், மேடையிலும், சட்டசபையிலும் துண்டு சீட்டு வைத்து, அதைப் பார்த்து படித்ததில்லை; பேசியதில்லை.
அதேநேரம், கல்லுாரியில் பட்டம் பெற்ற முத்தமிழ் வித்தகரின் மகனான தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரு துண்டு சீட்டை வைத்து, பார்த்து படித்து ஒப்பேற்றி, நாட்டை நிர்வகித்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் லயோலா கல்லுாரியில் பட்டம் வாங்கியதாக கூறும் விஜய், தன் கட்சி மாநாட்டில் துண்டு சீட்டுக்கு பதிலாக, ஏ4 பேப்பரில் எழுதி வைத்து படித்து, ரசிக கண்மணிகளை புல்லரிக்க வைத்து விட்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு இணையாக தமிழகத்தில் இன்னொரு துண்டு சீட்டு உருவாகி உள்ளதை பார்த்து, தமிழ் கூறும் நல்லுலகம் பூரித்து புளகாங்கிதம் அடைந்துள்ளது.
ஒரு மேடைப் பேச்சையே பேப்பரை பார்க்காமல் பேச தெரியாத ஒருவர், தமிழகத்தை ஆட்சி புரிய நினைப்பது வேடிக்கையாக மட்டுமல்ல; கேவலமாகவும் உள்ளது!
இல்லாத ஊருக்கு வழி கேட்கலாமா? கே.மூர்த்தி, சிதம்பரத்திலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'விநாயகர் சதுர்த்திக்கு தமிழகம் முழு
தும், ஹிந்து முன்னணி சார்பில், 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்படும். கடந்த ஆண்டு, 15 லட்சம் வீடுகளில், விநாயகர் சிலை களை
வைத்து வழிபட்டனர். இந்த ஆண்டு இதை அதிகப்படுத்த இருக்கிறோம்.
சென்னையில், 5,500 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் 5,000 இடங்களிலும்
சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட
நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்பது போல், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும்
வர வேண்டும்.
அதேபோன்று ரம்ஜானுக்கு அரிசி கொடுப்பது போல்,
விநாயகர் சதுர்த்திக்கு வீடுதோறும் சிறிய விநாயகர் சிலையை அரசு இலவசமா க
வழங்க வேண்டும்...' என்று தன் உள்ளக்கிடக்கையை கொட்டி தீர்த்துள்ளார்,
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.
விநாயகர் சதுர்த்தியும், ரம்ஜான் பண்டிகையும் தி.மு.க.,வினருக்கு ஒன்றா?
ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கழகம் ஆர்வத்தோடும்,
மகிழ்ச்சியோடும் கொண்டாடும். ஆனால், விநாயகர் சதுர்த்தியோ
தி.மு.க.,வினருக்கு வேண்டாத பண்டிகை. அதற்கு எப்படி அவர்கள் வருவர்?
ஹிந்துக்களின் ஓட்டுகளை கவர்வதற்காக கூட வரமாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை ஹிந்து தெய்வங்கள் தான் கடவுள்.
அதனால், தங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை ஹிந்து பண்டிகைகளில் மட்டும்
நிலைநாட்டி, தங்கள் பகுத்தறிவை பறைசாற்றுவரே தவிர, கண்டிப்பாக விழாவில்
பங்கேற்க மாட்டார்கள்.
அவர்களுக்கு சிறுபான் மையினர் ஓட்டுகள் போதும்; ஹிந்து ஓட்டுகள் தேவை இல்லை.
'வீடுதோறும் இலவசமாக விநாயகர் சிலையை அரசு வழங்க வேண்டும்' என்றும் ஒரு, 'பிட்டை' போட்டுள்ளார், காடேஸ்வரா சுப்பிரமணியம்.
தமிழகத்தில் இருப்பது வண்டல் மண்ணோ, கரிசல் மண்ணோ, செம்மண்ணோ, களிமண்ணோ
அல்ல. ஈ.வெ.ரா., மண்; இந்த மண்ணில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி.
அப்படியிருக்கும் போது, வீடுதோறும் ஈ.வெ.ரா., சிலையை இலவசமாக தருவரே தவிர, விநாயகர் சிலையை ஒருபோதும் வழங்க மாட்டார்கள்!
எனவே, இல்லாத ஊருக்கு வழி கேட்டால், பொல்லாப்பு தான் வந்து சேரும்!
சல்லிக்காசுக்கு பயன் உண்டா? வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ' இ - மெயில்' கடிதம்:
----------------------------------------------------------------------
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து, 50 ஆண்டுகள் ஆகி சாதனை படைத்து
விட்டார் என்று, சில தமிழ் தொலைக் காட்சிகள் அவரைப் புகழ்ந்து தள்ளுகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து கூறுகின்றனர்.
ஏனெனில், ரஜினி, 50 ஆண்டுகள் சினிமாவில் நடித்ததால், நாடு சுபிட்சம்
அடைந்து விட்டது. மக்கள் வறுமையிலிருந்து மீண்டு, மகிழ்ச்சியுடன்
வாழ்கின்றனர். எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விட்டது பாருங்கள்!
சினிமாவில் , 50 ஆண்டுகள் நடித்த பின்பும் , 'போதும்' என்ற எண்ணம் வந்து,
இளையோருக்கு வழிவிட மனம் இல்லை. 80 வயதானாலும் பேத்தி வயதுடைய நடிகையுடன்,
'டூயட்' பாடுகிறார். அதுசரி... ஆசையைத் துறக்க ரஜினி என்ன புத்த பிரானா?
அவரது இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையால், அவரும், அவரை வைத்து படம்
எடுத்த தயாரிப்பாளர்களும், இயக்குநர் களும் தான் கோடீஸ் வரர்கள் ஆகி
உள்ளனரே தவிர, இதனால், நாட்டு மக்களுக்கு சல்லிக்காசு பயன் இல்லை.
இதில், தொலைக்காட்சி களும், அரசியல்வாதிகளும் புளகாங்கிதம் அடைய என்ன இருக்கு?