தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/முதல்வர் யோசித்து செயல்பட வேண்டும்!

முதல்வர் யோசித்து செயல்பட வேண்டும்!

முதல்வர் யோசித்து செயல்பட வேண்டும்!


PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் செய்யும் தவறுகள், முதல்வர் விஜய்க் கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன.

அதிலும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

தற்போது, அருள் விக்னேஷ் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு இருந்தாலும், இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பார்த்த விஷயம், அரசுக்கு எதிராக மிகப் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், அருள் விக்னேஷ் மீது குற்றம் இருந்திருந்தால், ஆரம்பத்திலேயே சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம் அல்லது அவரது பதவியை ராஜினாமா செய்ய சொல்லி, அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கலாம்.

அப்படி செய்து இருந்தால், ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கும், இந்த அரசு மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும்.

அதைவிடுத்து, விசாரணையை தாமதப்படுத்தும் வகையில், திராவிட மாடல் அரசு போல், நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து, விசாரணை செய்ய உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமீபகாலமாக, நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது, முதல்வருக்கு சரியான ஆலோசனை சொல்லாமல், திட்டமிட்டே அவர் தவறாக வழிநடத்தப் படுகிறரோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், திராவிட மாடல் ஆட்சியில், தங்கள் கட்சியினர் செய்யும் குற்றங்களை மூடி மறைக்க, தி.மு.க., எப்படி முயன்றதோ, அதே பாணியே தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

முதல்வர் விஜய் தனக்கு தரும் ஆலோசனைகள் சரியானவை தானா, இதனால், மக்களின் அதிருப்திக்கு தன் அரசு ஆளாகுமா என்பதை எல்லாம் யோசித்து செயல்பட வேண்டும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us