PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM

மீனவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
சே.கணேஷ், பெரியகுளம், தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: அதிகாலை கடலுக்குச் சென்று இரவு கரை திரும்பும் மீனவர்களின் உழைப்பால் தான், நம் உணவுத் தேவையின் ஒரு பகுதி பூர்த்தியாகிறது. ஆனால், கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு பயணமும், அவர்களுக்கு சவாலாகவே இருக்கிறது.
திடீர் புயல், கடல் சீற்றம், பலத்த காற்று, படகில் ஏற்படும் இயந்திரக் கோளாறு போன்றவை, மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
முதலில், கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு படகிலும் நவீன தகவல் தொடர்புக் கருவிகள், ஜி.பி.எஸ்., கருவிகள், உயிர் காக்கும் கவசங்கள், அவசரகால எச்சரிக்கை வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். வானிலை மாற்றங்கள் குறித்து மீனவர்களுக்கு, அவர்களின் தாய்மொழியில் உடனுக்குடன் எச் சரிக்கை அனுப்ப வேண்டும்.
இரண்டாவதாக, மீனவர்கள் கடலில் காணாமல் போனால், உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடங்க வேண்டும். கடலோரக் காவல்படை, கடற்படை, மீன்வளத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நவீன ரேடார், செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் மீட்புப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
மூன்றாவதாக, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் நீண்ட கால உதவித் திட்டங்களை உருவாக்க வேண்டும். மீன வர்களுக்கு உரிய காப்பீட்டுத் திட்டங்களும் எளிமையாகக் கிடைக்க வேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய முக்கிய கடமை. கடலில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணங்களை ஆய்வு செய்து, மீண்டும் அத்தகைய துயரங்கள் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் மீனவர்களின் வாழ்க்கை பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம்.
முதல்வர் கட்டளைப்படி
அமைச்சர்கள் நடப்பரா?
கு. அருண், கடலுார் மாவட்டத்தி லிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தானே எதிர்பார்க்காத வகையில், 108 சட்டசபைத் தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்துள்ள விஜய், முழுமையாக ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய வேண்டும் என்று மனம் விழைகிறது.
ஏனெனில்...
கடந்த 1967ல், தி.மு.க., வின் அண்ணாதுரை ஆட்சி அமைத்தபோது, 19 மாதங் கள், ஊழல் இல்லாத தமிழ கத்தை பார்க்க முடிந் தது. அதன் பிறகு வந்த ஆட்சி களில், கருணாநிதி, ஸ்டா லின், அ.தி.மு.க.,வின் ஜெய லலிதா என, தமிழகம் தலைகுனியும் அளவுக்கு ஊழல் ஆட்சிகள் நடந்தன.
கிட்டத்தட்ட, 50 ஆண்டு காலமாக ஊழலைப் பார்த்து சலித்த மக்கள், யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கிய நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி, அரசியலில் குதித்து, திராவிடக் கட்சிகளிடமிருந்து ஆட்சியை, ‘அலேக்’காக கை மாற்றிக் கொண்டார் விஜய்.
முதல்வராக பதவி ஏற்ற நாள் முதல், ஊழலுக்கு எதிராக பேசி, ஆட்சியிலும் அதைக் கடைப்பிடிப்பதால், மக்கள் வேறு பிரச்னைகளைக் கண்டு கொள்வதில்லை.
மேலும், ‘மக்கள் பணத்தில், ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விட மாட்டேன்’ என்று கூறியது மட்டுமல்லாமல், தற்போது தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, தீபாவளியை சிறையில் கொண்டாட வைத்து விட்டார்.
தன் கட்சியினர் யாராவது ஊழல் செய்தால், பதவியை பறித்து விடுவதாக எச்சரித்து உள்ளார்.
சமீபத்தில், சென்னையில் ௧௦ மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய விழாவில், ‘லஞ்சம், ஊழல் மற்றும் போதைக்கு யாரும் அடிமையாகக் கூடாது’ என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர், ‘இந்த தவறுகளை செய்யும் போது சிறிது சந்தோஷம் இருக்கும். ஆனால், எதற்கும் அடிமையாகி விடா தீர்கள்’ என்று கூறியுள்ளதை, அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சியில் பல் வேறு பதவிகளில் உள்ளவர்கள் மற்றும் அவரது கட்சியினரும், ௧௦௦ சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிட வேண்டும்.
