PUBLISHED ON : நவ 02, 2026 12:00 AM

மடியில் கனமில்லை என்றால் பயம் எதற்கு?
அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தனியார் பள்ளிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘என் பெயரை தவறாக பயன்படுத்தி, பணம் வசூலித்த வழக்கில், என்னை சம்பந்தப் படுத்த முடியாது’ என்று கூறி, முன் ஜாமின் கேட்டுள்ளார், மகேஷ்.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ, ‘கட்சி நிதி என்ற பெயரில், 177 பள்ளிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், மகேஷ் சாட்சிகளிடம் கலந்துரை யாடியதாகவும், முக்கிய குற்றவாளியான எம்.எல்.ஏ., முத்துக்குமார், மகேஷ் பாதுகாப்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுவதால், சாட்சிகள் கலைக்கப்படவும், விசாரணை பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
‘மேலும், வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், முன் ஜாமின் மறுக்கப்படுகிறது’ என்று கூறிவிட்டது.
உயர் நீதிமன்றம் இவ்வளவு விளக்கமாக கூறிய பின்பும், போலீசார் மகேைஷ கைது செய்து அழைத்துச் செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து காவல் நிலையம், மருத்துவமனை, சிறைச்சாலை என்று, தி.மு.க.,வினர் எதற்கு முற்றுகையிட வேண்டும்?
இப்படித்தான், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான போதும் தகராறு செய்தனர்; எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் கொண்டு செல்லும்போதும், வாகனத்தை பின் தொடர்ந்து சென்று, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கருணாநிதி ஆட்சியில் ஜெயலலிதாவை கைது செய்தபோது, ‘பூஜைக்கு தயாராகிறேன்; முடித்து விட்டு வரலாமா?’ என்று அனுமதி கேட்டு, பூஜையை முடித்த பின், அமைதியாக வேனில் ஏறி அமர்ந்து காவல் நிலையம் சென்றார்.
அதுமட்டுமல்ல; சொத்து குவிப்பு வழக்கை இழுத்தடித்தாலும், முழுமையான ஒத்துழைப்பை கொடுத்தார், ஜெயலலிதா.
ஆனால், போலீஸ் விசாரணை என்றதுமே, தி.மு.க.,வினர் துடிப்பது ஏன்?
‘என் மேஜையில் தான் அந்த மூன்று பைல்களும் திறக்கப்படாமல் இருக்கிறது’ என்று, முதல்வர் விஜய் சொன்னபோது, ‘ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுங்கள்’ என்று, அன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டசபையில் வீரவசனம் பேசினாரே... நடவடிக்கை எடுக்கத் துவங்கியதும், விசாரணைக்கே முரண்டு பிடிப்பது ஏன்?
மடியில் கனமில்லை என்றால், வழக்கை சந்திக்க வேண்டியது தானே... உடல் நலக்குறைவு என்று மருத்துவமனையில் படுத்துக் கொள்ள ஏன் அனுமதி கேட்க வேண்டும்?
தி.மு.க., அமைச்சர்கள் தவறு செய்யவில்லையென்றால், வழக்கை முறையாக சந்தித்து, தங்களை நிரபராதியாக நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆர்ப்பாட்ட அலட்டல்கள் செய்தால், மக்களின் வெறுப்பை தான் சம்பாதிக்க வேண்டியிருக்கும்!
lll
