தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 7

இது உங்கள் இடம்: அக். 7

இது உங்கள் இடம்: அக். 7


PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்கள் யோசிக்க வேண்டும்!



க.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தேர்தல் ஆணையத்தின் உண்மையான அதிகாரம் என்னவென்பதை முதன் முதலில் அரசியல்வாதிகளுக்கு காட்டியவர், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.என்.சேஷன்.

அந்த வரிசையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரையும் கூறலாம்!

பல காலமாக திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை வைத்து, தேர்தல்கள் நடைபெற்று வந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற திட்டத்தின் வாயிலாக, வீடு வீடாக ஆய்வு செய்து, உண்மையான வாக்காளர் பட்டியலை தயாரித்து, நியாயமான தேர்தலுக்கு வழிவகுத்து வருகிறார், ஞானேஷ்குமார்.

ஆனால், ஊடுருவல்காரர்களுக்கு வாக்காளர் அட்டை கொடுத்தும், ஒருவரே பல இடங்களில் ஓட்டுரிமை வைத்தும், இறந்து போன வாக்காளர்களின் பெயரிலும் கள்ள ஓட்டுப் போட்டு, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு, வெற்றிப் பெற்றுவந்தவர்களுக்கு ஞானேஷ்குமாரின் செயல்பாடு உவப்பாக இல்லை. அதனால், பா.ஜ.,வின் ஓட்டு திருட்டுக்கு தேர்தல் கமிஷனர் துணை போகிறார் என்று கூறி வந்த, ‘இண்டி’ கூட்டணி கட்சியினர், இப்போது ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்கின்றனர்.

ஏற்கனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முடக்க, காங்., – எம்.பி., ராகுல் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் பலனளிக்காததால், தற்போது, தேர்தல் கமிஷனர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை காரணமாக வைத்து, மீண்டும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளார்.

இதற்கு ஒத்து ஊதியுள்ளது, கரப்பான் பூச்சி கட்சி அமைப்பு!

வரும் 2029 பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டால், தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாய் விடும் என்பதால், இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த துடிக்கின்றனர்!

அதற்கு, ஞானேஷ்குமார் பெயரை வைத்து போராட்டக்களத்தை சூடு குறையாமல் பார்த்துக் கொள்ள நினைக்கின்றனர். இத்தகையோரின் கைகளுக்கு நாடு சென்றால் என்னவாகும்... மக்கள் தான் யோசிக்க வேண்டும்!

lll



எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல!



வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: அ.தி.மு.க.,வில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு கட்சிப் பதவிகள் வழங்கப்படுவது, கட்சி நிர்வாகிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடிகராக இருந்தபோது, ரசிகர் மன்றத்திற்காகவும், பின் கட்சிக்காகவும் உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு, புதிதாக வந்தவர்களுக்கு பதவி கொடுப்பது, அவர்கள் உழைப்பை அலட்சியப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படும்.

அ.தி.மு.க.,வில் இருந்து, த.வெ.க.,விற்கு வந்துள்ளவர்கள் ஒன்றும் துாய்மையானவர்கள் அல்லவே... இல்லை இவர்கள் வந்துதான் கட்சியை வளர்க்கப் போகின்றனரா?

அ.தி.மு.க.,விலிருந்து த.வெ.க.,விற்கு தாவியுள்ள, முன்னாள் அமைச்சர் சம்பத்துக்கு, துணை பொதுச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர், அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகள் அமைச்சராக பதவியில் இருந்தும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கோ அல்லது அவரது கடலுார் தொகுதியின் வளர்ச்சிக்கோ சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடாதவர். இன்று அவருக்கு, த.வெ.க.,வில் கட்சிப் பதவி; நாளை தேர்தலில் நிற்க, ‘சீட்’ கொடுக்கலாம்.

இதுபோன்றோருக்கு பதவி வழங்குவது, கட்சிக்காக உழைத்த த.வெ.க., தொண்டர்களை சோர்வடையவே வைக்கும்!

எனவே, கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடித்து, அதிகாரம் எனும் பிள்ளையார் சுழி போட்டுள்ள முதல்வர் விஜய், அ.தி.மு.க.,வில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதும், அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவதில் தாராளம் காட்டுவதும், த.வெ.க.,வை தனித்துக் காட்டாது என்பதுடன், அதன் தனித்துவமும் குறைந்து போகும் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உழுது, விதை விதைத்து, பயிரை வளர்ப்பது ஒருவராகவும், அதன் பலனை வேறொருவர் அறுவடை செய்வதும் திராவிட கட்சிகளின் அரசியல் பாணி; அதை த.வெ.க.,வும் தொடர்வது, அதன் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல!

lll



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us