sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சபாஷ்... சரியான நடவடிக்கை!

/

சபாஷ்... சரியான நடவடிக்கை!

சபாஷ்... சரியான நடவடிக்கை!

சபாஷ்... சரியான நடவடிக்கை!

5


PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-ரா.சேது ராமானுஜம், விருதுநகரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --'நான் ஒரு ரூபாய் கூட திருடியதில்லை' - இப்படிச் சொன்னவர், மஹாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ, அப்துல் கலாமோ அல்ல; பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி, மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பியோடிய, தொழிலதிபர் விஜய் மல்லையா தான் இப்படி கூறியுள்ளார்.

இவர், தான் நடத்தி வந்த கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்காக, பொதுத்துறை வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், 2016ல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடி விட்டார்.

கடனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிக்கவே, அவரின் சொத்துக்களை முடக்கி விற்று, 14,130 கோடி ரூபாயை, அவர் கடன் பெற்ற வங்கிகளிடம் அரசு ஒப்படைத்து விட்டது.

இதுகுறித்து, சமீபத்தில், பார்லிமென்டில்மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததும், 'லபோ திபோ'வென குதிக்க ஆரம்பித்து விட்டார், மல்லையா.

'நான் வாங்கிய கடனைப் போல இரு மடங்கு தொகையை வசூலித்து விட்டனர்;இதற்கு சட்டரீதியான காரணங்களை அமலாக்கத் துறையும், வங்கிகளும் தெரிவிக்க வேண்டும்' என, சமூக வலைதள பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.

நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, விஜய் மல்லையா இந்தியாவில் இருந்தபடியே சொத்துக்களை விற்று, கடனை அடைத்திருக்கலாம். அதைவிடுத்து, கோழையைப் போல் வெளிநாட்டிற்கு தப்பிஓடியது மட்டுமின்றி, கடனை கட்டாமல் இழுத்தடித்தால் சும்மா இருப்பரா?

தற்போதைய பா.ஜ., அரசு, முந்தைய காங்கிரசை போல வேடிக்கை பார்க்காது; விட்டால், மல்லையாவின் வேட்டியைக் கூட உருவிவிடும்!

இந்த வரிசையில், நீரவ் மோடி, ெமஹுல்சோக்சியின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன; விரைவில், அவர்களது சொத்துக்களும் விற்கப்படலாம்.

வங்கிகளை மோசடி செய்ய நினைக்கும்,இத்தகைய பொருளாதார குற்றவாளிகளுக்கு,மத்திய அரசு சரியான தண்டனை கொடுத்துள்ளது!



சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம் : இசை ஞானி இளையராஜாவை ஸ்ரீவில்லிப்புத்துார் அர்த்த மண்டபத்தில் அனுமதிக்காததை, ஒரு பெரிய விவாதப்பொருளாக ஆக்கியிருக்கின்றன, சில ஊடகங்கள்.

கோவில்களுக்கு என்று சிலகட்டுப்பாடுகள், விதிமுறைகள்உள்ளன. கோவிலுக்கு செல்வோர் யாராக இருந்தாலும், அந்த விதி முறைகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்.

கருவறைக்குள் அர்ச்சகரைத் தவிர, நாட்டைஆளும் அரசன் கூட செல்லமுடியாது கோவில்களை கட்டிய அரசர்கள் கூட, தாங்கள் கட்டிய கோவில் தானே என்று கருவறைக்குள்சென்றது கிடையாது.

அர்ச்சகரே கூட ஆகம விதிகளையும், ஆச்சார நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பவராக இருந்தால் மட்டும் தான், கருவறைக்குள்செல்ல முடியும்.

கலெக்டர் என்பதற்காக,அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து விட முடியுமா? அதை அனுமதித்து விடுவீர்களா...அதைப் போல் தான் இதுவும்!

கேரள கோவில்களில்,ஆண்கள் சட்டை அணிந்துசெல்ல அனுமதியில்லை. நாட்டை ஆளும் பிரதமர் என்றாலும், இந்த விதிமுறையை பின்பற்றினால் தான் கோவிலுக்குள் செல்லமுடியும் எனும் போது, அதன் ஆகம விதிகளை புரிந்து கொள்ள வேண்டுமேதவிர, அதைப் பற்றி விவாதம் செய்யக் கூடாது.

அப்படிப் பார்த்தால், மாற்று மதத்தில் எத்தனையோமுரண்பாடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் உட்கார்ந்து விவாதிப்பீர்களா... அதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

ஸ்ரீவில்லிபுத்துார் கோவில்அர்த்த மண்டபம், காலம் காலமாக கருவறைக்குச் சமமாக பாவிக்கப்படுகிறது;எனவே, இளையராஜா அனுமதிக்கப்படவில்லை.

இளையராஜாவே இதுகுறித்து தெளிவாக விளக்கம்கொடுத்த பின்பும், அதைப்பற்றி பேசுவது அநாகரிகமாக தெரியவில்லையா?

மக்கள் உங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!



கட்டுப்பாடு விதிக்கலாம்!


என்.எஸ்.வெங்கட்ராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர்ஆலை, தமிழக அரசால்2018ல் மூடப்பட்டது.

தொழில் ஆலோசகர்கள்மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்கள், ஆலையை மூடவேண்டாம் என கேட்டுக்கொண்ட போதிலும், தமிழகஅரசு தன் முடிவை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் பல உள்ளூர்வாசிகள்,நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். தற்போது, அவர்களின் வாழ்வாதாரம்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலையை மூடிய அரசு, அவர்களுக்கு மாற்றுவேலை வாய்ப்பை அளிக்க,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இத்தொழிற்சாலையை நடத்திய வேதாந்தா நிறுவனம்,தற்போது, சவுதி அரேபியாவில், துவங்க முடிவு செய்துள்ளது. இதை, அந்நாட்டு அரசும் இருகரம் நீட்டி வரவேற்று உள்ளது.

இங்கோ, இருந்த ஆலையை மூடிவிட்டு காப்பருக்காக வெளிநாடுகளில் கையேந்து கிறோம்.

ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது, நாட்டின் தேவைக்கு போக,கணிசமான காப்பரை ஏற்றுமதி செய்து பல கோடிரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டி வந்த இந்தியா, தற்போது, அவற்றை இறக்குமதி செய்கிறது.

இதனால், மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் வரி வருமானத்தை இழந்துள்ளன.

சில அரசியல்வாதிகளும்,போராட்டக்காரர்களும், ஸ்டெர்லைட் ஆலையில்இருந்து சல்பர் டைஆக்சைடு வாயு வெளிவந்து, சுற்றுப்புறத்திற்கு கேடு ஏற்பட்டதாகவும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளிவருவதாகவும், அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் பரவுவதாகவும் கட்டுக்கதைகளை பரப்பி, மக்களை பயம் கொள்ள வைத்தனர்.

அது குறித்து, ஆலை நிர்வாகம் எவ்வளவோ விளக்கியும், போராட்டக்காரர்கள் கேட்கவில்லை. விளைவு, தொழிற்சாலை மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்.

ஆலை மூடப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் துாத்துக்குடிசுற்றுப்புற சூழ்நிலையில்,எவ்வித மாற்றமும் இல்லை;மக்களின் ஆரோக்கியத்தில்எந்தவித தடுமாற்றமும் இல்லை.

பசுமை தீர்ப்பாய நீதிமன்றம், 'ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம்' என்றுதீர்ப்பளித்தும், ஸ்டெர்லைட்ஆலையால் உள்ளூர்வாசிகளுக்கு பிரச்னை என்று கூறி போராட்டம் நடத்தினர்.

ஆனால், இன்று, உள்ளூர்வாசிகளே ஆலையை மீண்டும் இயக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.

தமிழக அரசு, நடந்து முடிந்த பல விரும்பத்தகாத சம்பவங்களை மறந்து, நன்மை பயக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை, மீண்டும் இயக்குவது குறித்துசிந்திக்க வேண்டும். அவசியம் என்றால் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்!








      Dinamalar
      Follow us