PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM

ஓ.என்.ராமநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என்னை துணை முதல்வராக்குவதாக கூறுகின்றனர். அப்படியெனில் நான் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவனா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.
பிரதான கட்சி வெற்றி பெற்றால், கூட்டணி கட்சித் தலைவருக்கு துணை முதல்வர் பதவிதான் வழங்குவர். இது தெரியாமல், தமாசு நடிகர் வடிவேலு பாணியில், 'முதல்வர் பதவிக்கு தனக்கு அருகதை இல்லையா?' என்று குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டால் எப்படி?
முதல்வர் பதவி என்ன நியமன பதவியா? 234 தொகுதிகளிலும் போட்டி யிட்டு, தனி பெரும்பான்மையுடனோ, கூட்டணி அமைத்தோ வெற்றி பெற்றால் தான் முதல்வராக முடியும். 2 சதவீத ஓட்டு வங்கி கூட இல்லாதவரை, 38, 40 சதவீத ஓட்டு வங்கி வைத்திருக்கும் பிரதான கட்சிகள், அ.தி.மு.க., அமைச்சர்களாக இருந்த பன்னீர்செல்வம், பழனிசாமியை போல், திருமாவளவனையும் முதல்வர் சீட்டில் அமர வைத்து அழகு பார்ப்பரா என்ன? அதற்கு தான் அவர்கள் கட்சி நடத்துகின்றனரா?
திருமாவளவனின் ஓட்டு சதவீதமே சொல்லும் அவர் எந்த பதவிக்கு தகுதியானவர் என்று!
அது சரி... ஆசைக்கு அளவேது?
ஆதாரம் கேட்கும் சிதம்பரம் அம்பலமான பாகிஸ்தான் பற்று! ஆர்.பெரியசாமி,
புதுச்சேரி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாட்டு
விடுதலைக்கு பாடுபட்ட கட்சி' என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ்
கட்சியின் பாகிஸ்தான் பற்று, பார்லிமென்ட் கூட்டத்தில் வெட்ட வெளிச்சமாகி
உள்ளது.
காங்., ஆட்சியில், 27 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. அவை
எல்லாம் உள்ளூர் பயங்கரவாதி களால் நிகழ்ந்ததா? பாகிஸ்தான் பயங்கரவாதிகளால்
நிகழ்த்தப்பட்டதா என்று அன்றைய எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கவில்லை!
காரணம், அவை நாட்டுப் பற்றுடன் இருந்தன.
ஆனால், பஹல்காம் தாக்குதல் நடத்திய வர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான்
என்பதற்கு ஆதாரம் கேட்கிறார், காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்!
வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள்
ஊடுருவியவர்களுக்கு புகலிடம் கொடுத்ததோடு, அவர்களுக்கு குடியுரிமை,
ஓட்டுரிமை வழங்கி காங்., கட்சியும், மே.வங்க முதல்வர் மம்தாவின் திரிணமுல்
காங்கிரஸ் கட்சியும் போஷித்து வருவதுபோல், பாகிஸ்தான் பயங்கரவாதி களை
இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து, சிவ கங்கை மாவட்டத்தில், சிதம்பரமே
அடைக்கலம் கொடுத்து, தாக்குதல் நடத்த ஏன் அனுப்பி வைத்திருக்கக் கூடாது
என்ற சந்தேகம், நாட்டு மக்களுக்கும் எழலாம் தானே?
'பஹல்காம்
தாக்குதலில் இறந்தவர்களை ஹிந்துக்கள் என்று சொல்லக் கூடாது; இந்தியர்கள்
என்று சொல்ல வேண்டும்' என்கிறார், காங்., - எம்.பி., பிரிய ங்கா.
பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும்
கிறிஸ்துவர்களும் இருந்திருந்தால், இந்தியர்கள் என்று சொல்லலாம்.
ஆடைகளை களைய வைத்து, முஸ்லிம் அல்லாதவரா என்று பார்த்துச் சுட்டதால், மரண
மடைந்தவர்களை ஹிந்துக்கள் என்று சொல்லாமல் , இந்தியர்கள் என்று எப்படி
சொல்வது?
பயங்கரவாத தாக்குதலை தடுக்க, பா.ஜ., அரசு தவறி
விட்டதாம். காங்., ஆட்சியில் தாக்குதல்கள் நடந்தபோது, பாகிஸ்தானை மண்டியிட
வைத்தனரா அல்லது நாட்டை பாதுகாப்பு மிகு இரும்புக் கோட்டையாக
வைத்திருந்தனரா?
பார்லிமென்ட், மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலை எவ்வளவு முன்னேற்பாட்டுடன் தடுத்து நிறுத்தினர்?
மூன்று நாட்களாக மும்பை பொது வெளியில் பயங்கரவாதிகள் சுற்றித் திரிந்து,
பல இடங்களில் குண்டு வைத்து, மும்பையை தீ பிடிக்க வைத்தனரே... அப்போது
எங்கே போனது காங்., ஆட்சியின் முன்னேற்பாடுகள்?
மொத்தத்தில்,
பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதத்தில், காங்., மற்றும் அதன் கூட்டணி
கட்சிகள், தங்கள் பாகிஸ்தான் பற்றையும், பதவி பித்தையும் நாட்டு மக்களுக்கு
தெளிவாக நிரூபித்து விட்டன.
இதற்கான பலனை தேர்தலில் இக்கட்சிகள் அறுவடை செய்வது நிச்சயம்!
பழனிசாமி குற்றம் சாட்டலாமா? வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அரசு கோவில் நிதியிலிருந்து
கல்லுாரிகள் கட்டி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார், அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி.
உடனே, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா
ஆட்சியிலும் இது போல் நடந்த தாகவும், கல்லுாரிகள் கட்டுவதில் என்ன தவறு,
நல்ல செயல் தானே என்று கூறி, பழனிசாமி அவதுாறாக பேசி விட்டது போன்று
பிரசாரம் செய்து வருகின்றனர், தி.மு.க.,வினர்.
கோவில்
பராமரிப்பிற்கும், தினசரி பூஜைகளுக்கும், திருவிழாக்களை நல்ல முறையில்
நடத்துவதற்கும் தான், நிதி உதவி அளிக்கின்றனர், பக்தர்கள்.
அதை அரசு எடுத்து, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள் கட்டுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
கல்லுாரி கட்டுவது நல்ல காரியம் தான். ஆனால், அது பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்ட வேண்டுமே தவிர, கோவில் நிதியில் கட்டக் கூடாது.
அத்துடன், கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுப்பது, வீடு, கடைகளை வாடகைக்கு
எடுப்பதில் பெரும்பாலனோர் அரசியல் வாதிகளும், அவர்களது ஆதரவாளர்களுமே!
இவர்கள், ஒப்புக் கொண்ட தொகையை ஒழுங்காக கோவிலுக்கு செலுத்துவதும் இல்லை.
இந்நிலையில், தற்போது திராவிட மாடல் அரசு, கோவில் நிதியில் கல்லுாரிகள்
கட்ட துடிப்பதன் காரணம், ஒப்பந்ததாரர்களிடமிருந்து, 10 சதவீத கமிஷனோ,
அதற்கும் மேலோ கட்சிக்காரர்கள் வசூலித்துக் கொள்ளலாம்.
பணம்
பெற்று, தங்களுக்கு வேண்டியவர்களை பணி நியமனம் செய்யலாம். கல்லுாரி
வளாகத்திற்குள், ஈ.வெ.ரா., கருணாநிதி போன்றோரின் சிலைகளை நிறுவலாம், சுப
.வீரபாண்டியன், ஆ .ராசா, பொன்முடி போன்ற மாமனிதர்களை அழைத்து வந்து
மாணவர்களிடையே உரையாற்றச் சொல்லலாம்...
ஈ.வெ.ரா.,வின் பொன்
மொழிகளை வகுப்பறைகளில் எழுதி வைக்கலாம், 'கருணாநிதியின் ஆட்சியே
தமிழகத்தின் பொற்காலம்' என்ற தலைப்பில் மாணவர்களை பேசச் சொல்லலாம்...
திராவிட மாடல் ஆட்சி யில் இத்தனை கல்லுாரிகள் கட்டினோம் என்று சாதனைப் பட்டியலில் போட்டுக் கொள்ளலாம்...
இப்படி கோவில்கள் நிதியில் கல்லுாரிகள் கட்டு வதில் திராவிட மாடல்
அரசுக்கு எத்தனையோ நன்மைகள் உள்ளன. இதுகுறித்து சற்றும் யோசிக்காமல்
பழனிசாமி குற்றம் சாட்டலாமா?