PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

கு.அருணாச்சலம், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளச்சாராய மரணங்களை தடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் அரசு,'டாஸ்மாக்' கடைகளை நடத்துவதாகக் கூறுகின்றனர். அதேநேரம், கள்ளச்சாராயத்தைகுடித்து தான், கள்ளக்குறிச்சியில், 67 பேர் பலியாயினர். இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான, கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகிலேயே, கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார் என்றால், காவல் துறை அதிகாரிகளுடன் கூட்டணி இல்லாமலா இருக்கும் அல்லது ஆளுங்கட்சியின் அரவணைப்பு தான் இல்லாமல் இருக்குமா?
கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மற்றும் தயாரித்தவர்களைவிட, இதற்கு அனுமதி அளித்த அல்லது கடமை தவறிய காவல் துறை அதிகாரிகள்தான், முதல் குற்றவாளிகள். இவர்களை குற்றவாளிகளாக சேர்க்காமல், விற்பனை செய்தவர்களை மட்டும் குற்றவாளிகளாகக் கருதி, வழக்கு நடத்தினால், அதனால் என்ன பயன்?
கள்ளச்சாராய சாவை தடுக்கத் தவறிய, ஒன்பது காவல் துறை அதிகாரிகளையும் குற்றவாளிகளாக இவ்வழக்கில் சேர்த்து, அவர்களில் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட்டால் தான், நீதி வென்றதாக அர்த்தம்!
அவர்களை 'சஸ்பெண்ட்' செய்துவிட்டு, மீண்டும் சில மாதங்களில் வேறு இடத்தில் பணியமர்த்துவது எந்த வகையில் நியாயம்?
அதிலும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்காவல் துறை அதிகாரிகள் எனும்போது, சி.பி.சி.ஐ.டி., இந்த வழக்கை விசாரணை செய்தால், அது எப்படி நேர்மையாக இருக்கும்?
தற்போது, இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக, தற்போது வரை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படாமல்தப்பித்து வரும் காவல் துறை அதிகாரிகளில் சிலர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
அதில், ஒரு சில காவல் துறை அதிகாரிகளாவது தண்டிக்கப்பட்டால்தான், வருங்காலத்தில், எந்தவொரு காவல் துறை அதிகாரிகளும், சட்டவிரோத செயல்களுக்கு துணைபோக மாட்டார்கள்.
இந்த அதிரடி தீர்ப்பின்மேல், தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில்,அது குற்றவாளிகளைக் காப்பாற்றஎடுக்கும் முயற்சியாகவே கருதப்படும்!
எது மதவாத கட்சி?
கே.என்.ஸ்ரீதரன்,
சிட்னி, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆட்சியும், பதவியும்கிடைத்து விட்டால், கொள்கையும், சித்தாந்தமும்காற்றில்
பறந்து போகும் என்பதற்கு, உத்தவ் தாக்கரேஓர் உதாரணம். 2019ல் பா.ஜ.,வுடன்
கூட்டணி அமைத்து, வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரே, முதல்வர்பதவி வேண்டும்
என்பதற்காக, காங்., மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்.,உடன் சேர்ந்து
ஆட்சி அமைத்தார்.
'ஹிந்துத்துவா தான் உயிர்மூச்சு' என்று வாழ்ந்த
பால்சாஹேப் தாக்கரே, கடைசி வரை தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை;
காங்.,கை எதிர்த்துதான் அவர் அரசியல் செய்தார். ஆனால், பதவிக்காக, காங்.,
உடன் சேர்ந்த உத்தவ், தன் கொள்கையில்இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி,
ஓட்டுக்காக முஸ்லிம்களை தாஜா செய்யவும் ஆரம்பித்தார்.
இதனால், ஏக்நாத் ஷிண்டே,பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு, சிவசேனாவை விட்டு வெளியேறி, பா.ஜ.,வின் துணையோடு முதல்வர் ஆனார்.
அன்று, உத்தவ் செய்ததுசரி என்றால், பின், ஷிண்டேசெய்ததும் சரி என்று மக்கள் நினைத்தனர். அதன்விளைவே, மஹாராஷ்டிராதேர்தல் முடிவு!
'ஜனநாயகத்துக்கு
ஆபத்து, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை,பா.ஜ., ஆட்சியில்,
அரசியல்சட்டம் திருத்தப்படும், இடஒதுக்கீடு போய்விடும்' என்று
அடுக்கடுக்காக பொய்களை சொல்லி, எத்தனைகாலம் தான், காங்., மக்களை
பயமுறுத்திக் கொண்டிருக்கும்?
கேரளாவிலும், ஜம்மு - காஷ்மீரிலும்,
முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களுடன்கூட்டு; மஹாராஷ்டிராவில்ஹிந்துத்துவம்
பேசும் கட்சிஉடன் கூட்டு. ஆனால், மதவாத கட்சி என்று குற்றம்சாட்டுவதோ
பா.ஜ.,வை!
மக்கள் எப்படி காங்.,சை ஏற்றுக்கொள்வர்?
கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுக்கும்திறமை வாய்ந்த தலைவர்கள்இப்போது காங்.,கில் இல்லைஎன்பதே நிதர்சனம்!
ஆளுக்கொரு நீதியா?
ப.ராஜேந்திரன்,
சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: வேலுார் மாவட்டம்,
பள்ளிகொண்டா அருகே, 14 வயது சிறுமி, இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, அங்கு
மது அருந்திக்கொண்டிருந்த மூவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்றுள்ளனர்.
சிறுமியின் தந்தை பள்ளிகொண்டா போலீசில்
புகார்கொடுக்க சென்ற போது, 'சம்பவம் நடந்த இடம் வேப்பங்குப்பம் எல்லை'
எனக் கூறி, போலீசார் அவரை திருப்பி அனுப்பிஉள்ளனர். வேப்பங்குப்பம்
போலீசாரோ, 'அது,எங்கள் எல்லை இல்லை' என்று பள்ளிகொண்டாவிற்கு
அனுப்பியுள்ளனர்.
இப்படி, இரு காவல் நிலையங்களிலும் அலைக்
கழிக்கப்பட்டு, ஒரு போராட்டத்திற்கு பின்,பள்ளிகொண்டா போலீசார்புகாரை
வாங்கி, குற்றவாளி களை கைது செய்துள்ளனர்.
இதே ஒரு ஆளுங்கட்சி வட்டச் செயலரோ, வண்டு முருகனோ புகார் கொண்டு வந்திருந்தால், இப்படித்தான் போலீசார் நடந்து கொண்டிருப்பரா?
இந்த ஆட்சியில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி, அபலை மக்களுக்கு ஒரு நீதியா?
'ஓர்
இளம்பெண், எப்போது இரவில் தன்னந்தனியாக நடமாட முடிகிறதோ, அன்று தான்
இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள்' என்றார், காந்திஜி.
மதுபோதையில், பட்டப்பகலிலேயே குத்தும், வெட்டும், கொலையும், கொள்ளையும் நடந்து கொண்டிருக்கையில், இரவில் நடமாடத் தான் முடியுமா?
'தனிப்பட்ட
கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் சம்பந்தமில்லை' என்று கூறும்
தி.மு.க., அரசு, புகார்களை ஏற்க மறுக்கும் காவல் நிலையங்களையாவது,
ஒழுங்குபடுத்தி வைத்தால் நல்லது!
முதல்வ ர் படிக்க வேண்டும்!
ஜெ.மனோகரன்,
மதுரையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழகமுதல்வர், அடிக்கடி,
தன் தலைமையில் வெகுசிறப்பாக ஆட்சி நடைபெறுவதாக பெருமைப்பட்டுக்
கொள்கிறார். தமிழகத்தின் உண்மை நிலையை அவர் அறிந்துகொள்ள வேண்டும்என்றால்,
தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, 'தினமலர்' நாளிதழில் வெளியாகும், 'இது
உங்கள் இடம்' பகுதியை படிக்க வேண்டும்.
பொதுமக்கள், அரசு
ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் என, அனைவரின் மனநிலையையும், இதன் வாயிலாக
அறிந்து கொள்ளலாம். அத்துடன், பிரச்னைகளுக்கானதீர்வும், ஆலோசனைகளும்
கிடைக்கும்!
உளவுத்துறைக்கு இணையான இப்பகுதியைதமிழக முதல்வர் படிப்பாரா?