PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM

நவம்பர் 26: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரில் ஐராவதம் என்பவரது மகனாக, 1930, அக்டோபர் 2-ல் பிறந்தவர் மகாதேவன். திருச்சியில் பள்ளி படிப்பை முடித்த இவர், சென்னை விவேகானந்தா கல்லுாரியில் வேதியியலில் இளங்கலை பட்டமும், சட்ட கல்லுாரியில் சட்டமும் பயின்றார்.
கடந்த 1954-ல் இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தார். தமிழ் பிராமி கல்வெட்டுகளை ஆய்வு செய்து, அவற்றை வாசிக்கும் முறையை உருவாக்கினார். சிந்துவெளி எழுத்துகளுக்கும், திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்தார். 1977ல், ‘த இண்டஸ் ஸ்கிரிப்ட்’ உள்ளிட்ட பல ஆய்வு நுால்களை வெளியிட்டார்.
இவரது, ‘ஏர்லி தமிழ் எபிகிராபி’ முக்கியமான ஆய்வு நுாலாக போற்றப்படுகிறது. 1980-ல் விருப்ப ஓய்வு பெற்றவர், 1987 முதல் 1991 வரை, ‘தினமணி’ நாளிதழின் ஆசிரியராக பணியாற்றினார். 2009-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர், 2010-ல் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.
தமிழ் பிராமி கல்வெட்டியல், சிந்துவெளி எழுத்தாய்வு ஆகிய துறைகளில் முக்கிய பங்காற்றிய இவர், 2018ல் இதே நாளில், தன் 88-வது வயதில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
