தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: நவ. 30

இதே நாளில் அன்று: நவ. 30

இதே நாளில் அன்று: நவ. 30


PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 30, 1931

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில், பஞ்சாபி குடும்பத்தில் தயா ராம் தாப்பர் – கவுசல்யா தாப்பர் தம்பதியின் மகளாக, 1931ல் இதே நாளில் பிறந்தவர் ரொமிலா தாப்பர். புனேவில் பள்ளி படிப்பை முடித்த இவர், பஞ்சாப் பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலையின் கீழ், இந்திய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.

பண்டைய இந்திய வரலாறு, சமூக பண்பாட்டு வரலாற்றை ஆய்வு செய்வதில் சிறந்து விளங்கினார். இவரது, ‘அசோகர் மற்றும் மவுரிய பேரரசின் வீழ்ச்சி, இந்திய வரலாறு, பண்டைய இந்தியா’ உள்ளிட்ட ஆய்வு நுால்கள், இந்திய வரலாற்று எழுத்தியலில் முக்கிய மைல்கற்கள். மன்னர்களின் காலவரிசை, போர்களை தாண்டி, சமூக அமைப்பு, பொருளாதார மாற்றங்கள், சமயங்களின் பரிணாமம் மற்றும் மாற்றுக்குரல்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்தார்.

மதச்சார்பற்ற பார்வையையும், வரலாற்றை அரசியல் நோக்கில் திரிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டையும் முன்வைத்து வரும் இவர், ஆக்ஸ்போர்டு, சிகாகோ, கொல்கட்டா பல்கலைகளின் கவுரவ முனைவர் பட்டங்களையும், வாழ்நாள் வரலாற்று ஆய்வுக்காக, 2008-ல் அமெரிக்க காங்கிரஸ் நுாலகத்தின் உயரிய, ‘க்ளூக்’ பரிசையும் பெற்றார்.

வரலாற்று அறிஞர்களில் தனித்துவமான ஆளுமையான இவர், தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலையின் ஓய்வுபெற்ற பேராசிரியராக உள்ளார்.

இவரது ௯௫வது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us