PUBLISHED ON : அக் 18, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., செயலரான கராத்தே தியாகராஜனின்மணி விழா நிகழ்ச்சி, சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் பிரமாண்டமாக நடந்தது.
இதற்காக, வீட்டு வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டுஇருந்தது. கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவிக்க வரிசையில் நின்றனர். அப்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென வருகை தந்து, கராத்தே தியாகராஜனுக்கும், அவரது மனைவிக்கும்பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல, பழைய நட்பை மறக்காமல், சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சார்பில் அவரது ஆதரவாளர்கள், தென்சென்னை மாவட்ட காங்., நிர்வாகிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'தியாகராஜன்,'எதிர் முகாமிலும் எனக்கு ஆதரவு இருக்கு'ன்னு காட்டி, சட்டசபை தேர்தலுக்கு இப்பவே தொகுதிக்கு, 'துண்டு' போடுறாரோ...?' என, முணுமுணுத்தவாறு கிளம்பினார்.