PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM

துணை முதல்வர் உதயநிதியின் திருச்சி வருகை தொடர்பாக, தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் நேரு, மண்ணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கதிரவன் பேசுகையில், 'திருச்சிக்கு துணை முதல்வர்வருகிறார். திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளிடம் லேசுபாசாக சொன்னாலே பலமான ஏற்பாடுகளை செய்து விடுவர் என அமைச்சருக்கு தெரியும். அதற்கு காரணம், எங்கள் மாவட்ட செயலர் கொடுத்திருக்கும் சுதந்திரம் தான்' என்றார்.
தொடர்ந்து, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி பேசுகையில், 'திருச்சி மத்திய மாவட்டத்துக்கு இணையாக யாரும் வர முடியாது. திருச்சியில் ஒரு கடலை பார்க்க வேண்டும் என்றால், மத்திய மாவட்டத்தில் தான் முடியும்' என்றார்.
மூத்த நிர்வாகி ஒருவர், 'இப்படி போட்டி போட்டு பேசிட்டு, ஏற்பாடுகளில் சொதப்பினால் ரெண்டு பேரும் மறுபடியும் எம்.எல்.ஏ., ஆக முடியாது...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

