PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டல குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும்,54வது வார்டு கவுன்சிலரான, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சிவராஜசேகரன், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்போது பேசுகையில், 'ஈ.வெ.ரா.,வின் மரபு வழிபேரனுக்கு, கொள்கை வழி பேரனான முதல்வர் ஸ்டாலின்அரசு மரியாதை செலுத்தியதை நன்றியுடன் நினைக்கிறோம். முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்'என்றார்.
ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர், 'நம் முதல்வர் அரசு மரியாதை அளித்தது இருக்கட்டும்... காங்., கட்சி டில்லி தலைவர்களோ, பக்கத்தில் தெலுங்கானா, கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களோ கூட இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்த வரலையே...' என முணுமுணுக்க, மற்றொரு கவுன்சிலர், 'அதனால தான் காங்., தேய்பிறையாகவேஇருக்கு...' என, 'கமென்ட்' அடித்தார்.