PUBLISHED ON : ஜன 28, 2026 02:44 AM

சென்னை மாநகராட்சியின் அம்பத்துார் மண்டலத்தில், பணி நிரந்தரம் கேட்டு, ஐந்து மாதங்களுக்கும் மேலாக போராடி வந்த துாய்மை பணியாளர்களை சந்தித்து சமரசம் பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, போராட்டத்தை முடித்து வைத்தார்.
தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு மற்றும் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இணைந்து, 1,390 துாய்மை பணியாளர்களுக்கும், மட்டன் பிரியாணியுடன் விருந்து வைத்தனர்.
நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதால், தாமதமாக வந்த அம்பத்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட கட்சியினர், மண்டபத்தின் வெளியிலேயே நின்றிருந்தனர்.
இதை பார்த்த தொண்டர் ஒருவர், 'நம்ம ஏரியாவில் பல மாதங்களாக நடந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை, எம்.எல்.ஏ., கண்டும் காணாமல் இருந்துட்டு, போராட்டத்தை முடிக்கிறப்ப மட்டும், போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்துட்டாரோ...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

