PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

தெற்கு ரயில்வே சார்பில், மதுரையில் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தமிழகம், கேரளாவை சேர்ந்த 18 எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; ஆனால், இதில், 11 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த துாத்துக்குடி கனிமொழி, காங்கிரசை சேர்ந்த கரூர் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி உட்பட ஏழு பேர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற வைகோவிடம், 'உங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் உட்பட ஏழு பேர் வரவில்லையே?' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, சிரிப்பையே பதிலாக தந்தவர், 'அவங்களுக்கு என்ன வேலையோ' எனக் கூறி சமாளித்தார்.
நிருபர் ஒருவர், 'இதுவே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்காமல் இருந்தால், இந்நேரம் தாம்துாம் என வைகோ கொந்தளித்து இருப்பாரே... இவங்களுக்கு வந்தால் ரத்தம்; மத்தவங்களுக்கு என்றால் தக்காளி சட்னியா...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.