தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ரேஷன் கடையில் தான் நிற்கணும்!'

 'ரேஷன் கடையில் தான் நிற்கணும்!'

 'ரேஷன் கடையில் தான் நிற்கணும்!'


PUBLISHED ON : பிப் 11, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2026 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, அரும்பாக்கம் பஞ்சாயத்தில் சமீபத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக, வேலுார் தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் பங்கேற்றார்.

அப்போது, தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்தனர். மேலும், மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக கைத்தடியுடன் நின்றபடி, வீட்டுமனை பட்டா வேண்டும் என்றார்.

இதை கேட்ட கதிர் ஆனந்த், 'தாசில்தாரிடம் விபரங்களை கொடுங்கள்; நான் பார்த்து கொள்கிறேன். நீண்ட நேரம் நிற்கிறீர்களே பாட்டி... நீங்கள் தேர்தலில் நிற்கலாமே' என்றார். இதனால், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

அப்போது, மற்றொரு மூதாட்டி, 'இவங்க கட்சியில அப்பா, மகன், பேரன்னு வாரிசு அடிப்படையில் தேர்தலில் நிற்பாங்க... நாம எங்க போய் நிற்கிறது... ரேஷன் கடை, 'கியூ'வில் தான் நிற்கணும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us