PUBLISHED ON : ஆக 21, 2026 02:01 AM

த.மா.கா., தலைவர் வாசன், திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின் அவர் அளித்த பேட்டியில், 'தமிழக விவசாயிகளுக்கு பயிர் பிரச்னையாக மட்டுமல்ல; உயிர் பிரச்னையாகவும் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கூறியும், கர்நாடக அரசு நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. இதை சட்டரீதியாக அணுகுவது தான் சரியானது என தமிழக அரசு கருதி, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது; இப்பிரச்னையில் நமக்கு நியாயம் கிடைக்கும் என முழுமையாக நம்புகி றேன்.
'த.மா.கா., தற்போது காங்., மற்றும் ஒருமித்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து, தனித்தன்மையுடன் பணியாற்றி வருகிறது. உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்தும் பணியை துவங்கியுள்ளோம்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'நல்லாட்சி தரும் த.வெ.க.,வுடன் உள்ளாட்சி தேர்தலில் இணைவோம்னு சொல்லாம சொல்றாரோ?' என கேட்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
