PUBLISHED ON : ஜூன் 30, 2026 12:00 AM

சென்னை, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் சமீபத்தில் நடந்தது. அப்போது, 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், 'புதிய ஆட்சி வந்த பின், என் வார்டில் ஒரு மாத காலமாக எந்த பணியும் நடக்கவில்லை' என குற்றம்சாட்டினார்.
அதற்கு 6வது வார்டு காங்., கவுன்சிலர் திரவியம், 'பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது' என, த.வெ.க., அரசுக்கு ஆதரவாக பேசினார். அவரது அருகே அமர்ந்திருந்த 4வது வார்டு மா.கம்யூ., கட்சி கவுன்சிலர் ஜெயராமன், 'எங்கு பணி நடக்கிறது? ஒரு பணியும் நடக்கவில்லை' என, ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், 'மா.கம்யூ., கட்சியும் த.வெ.க., கூட்டணியில் தானே இருக்குது... அப்புறம் ஏன் அடிச்சுக்கிறாங்க...?' என கேட்டார்.
இதற்கு பதிலளித்த மூத்த நிருபர், 'கம்யூ.,க்கள் இன்னும் தி.மு.க., கூட்டணியில் இருந்து முழுசா வெளியே வரலை போல...' என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.
