PUBLISHED ON : ஜூலை 01, 2026 12:34 AM

சென்னை, வேளச்சேரி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான குமார், சமீபத்தில் வேளச்சேரி ஏரியை பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி ஊழியர்கள் ஆகாய தாமரை செடிகளை அகற்றி கொண்டிருந்தனர்.
ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரிடம் அதிகாரிகள் கூறினர். இதை கேட்ட நலச்சங்க நிர்வாகி ஒருவர், 'கடந்த 30 வருஷங்களா பதவியில் இருந்த அமைச்சர்கள் ஏரியை பார்வையிடும் போதெல்லாம் ஏரியை துார்வாரி, கழிவுநீர் கலப்பதை தடுத்து, படகு குழாம் அமைத்து சுற்றுலா தலமாக மாற்றுவோம் என்று கூறினர். இதுவரை ஏரியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை' என, அமைச்சரிடம் புகார் கூறினார்.
அமைச்சர் அதை கேட்டும், கேட்காமலும் அங்கிருந்து நகர்ந்தார்.
இதை பார்த்த முதியவர் ஒருவர், 'இனிமே அப்படி நடக்காதுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லாம போறாரே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
