PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

சென்னைக்கு, 'ரெட் அலெர்ட்' கொடுக்கப்பட்ட நேரத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது,சிறு குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததை பார்த்த உதயநிதி, 'ஏரியில் இவ்வளவு தண்ணீர் குறைவாக இருந்தும், பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். 'நவம்பர் மாசம் சர்வ நாசம்' என்றெல்லாம் கிளப்பி விடுகின்றனர்'என, அன்பரசனிடம் கூறினார்.
உடனிருந்த செல்வப்பெருந்தகை, 'பிரேக்கிங் நியூஸ் போட்டே நமக்கு பீதியை ஏற்படுத்தி விடுகின்றனர்; இதனால், மக்கள் மேம்பாலத்தில் கார்களைநிறுத்தி விட்டனர்' என்றதும், உதயநிதி சிரித்தார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இப்படி எல்லாம் அலெர்ட்டா இல்லாட்டி, இவங்க மக்களை மிதக்க விட்டுருவாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.