/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'பழசை முடிச்சிட்டு புதுசுக்கு வரலாமே!
/
'பழசை முடிச்சிட்டு புதுசுக்கு வரலாமே!
PUBLISHED ON : பிப் 17, 2026 02:34 AM

தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம், சேலத்தில் சமீபத்தில் நடந்தது; வர்த்தகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை வகித்து பேசுகையில், 'எல்லாரும் எதிர்பார்க்கும் தேர்தல் அறிக்கையில், நாங்கள் குறிப்பிடும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். 'செய்வதை சொல்வோம்; சொல்வதை செய்வோம்' என்ற தாரக மந்திரத்தின்படி, தேர்தல் அறிக்கை எழுதப்படுகிறது.
'உங்களுடைய கருத்து, கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு, முடிந்த வரை அறிக்கையில் சேர்க்கப்படும். தேர்தல் முடிந்த பின், அவற்றை நிறைவேற்றி தருவோம் என உறுதியளிக்கிறோம்' என்றார்.
இதை கேட்ட வர்த்தகர் ஒருவர், 'முதல்ல, 2021 தேர்தலில் தந்த பழைய வாக்குறுதிகள் எல்லாத்தையும் நிறைவேத்திட்டு, புதுசா வாக்குறுதிகள் தரலாமே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.

