PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திர பாபு, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தில், நிருபர்களை சந்தித்தார்.
அப்போது கூறுகையில், 'டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவிக்கு என் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது. இப்பதவிக்கு, 62 வயது வரை உள்ளவர்களை மட்டுமே நியமிக்க முடியும். என்னை நியமித்தால், ஆறு மாதங்கள் மட்டும் பணியில் இருக்க முடியும் என, அரசின் பரிந்துரையை கவர்னர் நிராகரித்தார்.'இப்பதவியை எனக்கு வழங்கியிருந்தால், சிறப்பாக பணிபுரிந்திருப்பேன். இனி, அப்பதவி மீது விருப்பம் இல்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடலை... இவர் மட்டும் அரசியலுக்கு வந்தார்னா, முதல்வர் இவரை எம்.பி.,யாக்கி டில்லிக்கு அனுப்பிடுவாரே...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.